https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

புதுவை வெண்முரசு 75 வது சிறப்பு அமர்வு சில தருணங்கள்

 புதுவை வெண்முரசு கூடுகை தனது 75 வது கூட்டம் 12.09.2024 வியாழன் அன்று காலை 10:20 க்கு துவங்கியது. இது எழுத்தாளர் ஜெயமோகன் புதுவைக்கு வந்து கலந்து கொள்ளும் மூன்றாவது பெரிய நிகழ்வு. முதல் நிகழ்வு கூடுகை துவங்கி ஒரு வருடம் கழித்து முதல் நாவல் வெண்முரசுமுதற்கணல்நிறைவின் போது நடந்தது. இரண்டாவது கூடுகைநின் 50 வது நிகழ்வின் போது இப்போது எழுப்பத்தைந்தின் நிறைவின் பொருட்டு. மூன்றுமே மாதம் தோறும் கூடும் அதே இடத்தில் நிகழ்ந்தது . முதலாண்டு வெண்முரசு கூடுகை ஏதாவது பெரிய கூடத்தில் நடத்தலாம் என்கிற கருத்து முன வைக்கப்பட்ட போது எனக்கு அது அதர்வை கொடுத்தது. “ஜெகலந்து கொள்ளும் அந்த முதல் கூட்டத்தில் எனக்கு பேச நிறைய இருந்தது. முற்றும் புதிய இடத்தில் என்னால் பேச இயலாது என்பதாக இருந்தது என்னைவிட மணிமாறன் இன்னும் அதிர்ந்திருந்தார்.வழக்கமான இடத்தை தவிற்து புது இடம் செல்வது எங்களை சொல்லெழாமல் செய்துவிடும். இறுதியாக வருடம் முழுவதும் நடக்கும் அதே இடமான எனது இல்லத்தை எதற்காகவும் மாற்ற வேண்டாம் என முடிவு செய்தோம். அதிலிருந்து இந்த75 வது வரை இடம் மாற்றுவது பற்றிய சிந்தனை எழவில்லை

முதல் வருட கொண்டாட்டமாக சிறப்பு விருந்தினர் ஜாஜா வெண்முரசின் வாசிப்பு முறை பற்றிய புதிய கோணத்தை பதிவு செய்தார் . 50 வது கூடுகையில்ஜெவெண்முரசைகீதையின் சுருக்கமான உரைஎன அறிவித்து அனைவரையும் அதிர வைத்தார். 75 வது கூடுகையில் தனது மனம் வெண்முரசில் இருந்து வெகு தூரம் விலகிய நிலையில் வெண்முரசு எழுதுவதில் நிகழ்ந்த தர்க்க புரிதல்கள் அவரை பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்றதை முன்வைத்தார். வாசகர்களுக்கும் அது கொடுத்த புரிதல்கள் அவரின் கண்டடைதலுக்கு நிகரானவைகள். அதை முன் வைத்தே புதுவை வெண்முரசு கூடுகை தனது பயணத்தை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்த்தி வருகிறது.  

முதல் இரண்டு நிகழ்வுகளும் எனக்கு நிறைவை கொடுக்காத மனக் குறை உண்டு.75 வது கூடுகை கடந்த காலத்தில் இருந்து கற்ற பாடத்திலானது. இம்முறை மிக தெளிவான திட்டமிடலும் அதை செயல்படுத்து குழுக்களும் மிக நிறைவான பணியினை செய்தனர். அனைவரும் சொன்னது மிக கச்சிதமான ஒருங்கிணைப்பு என்று. அனைத்து குழுவிற்கும் பாராட்டும் நன்றியும் வணக்கமும்













































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...