https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 28 ஆகஸ்ட், 2019

அடையாளமாதல் - 457 *பார்வையும் பதிவும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 457

பதிவு : 457 / 637 / தேதி 28 ஆகஸ்ட் 2019

*பார்வையும் பதிவும் 


எழுச்சியின் விலை ” - 58
முரண்களின் தொகை -03 .

அரசியலில் எந்த பின்புலமும் இல்லை என்றபோதும் , அது எனது  பிரதான துறையாக சிறிது சிறிதாக மாறி நின்றதற்கு எனது ஆழ்மன விழைவால்  செலுத்துதல்  , என்கிற ஒன்றைத் தவிர வேறு எந்த காரணமும் என்னுள் நிலை நில்லாதவை . அன்று அரசியலை  நான் இப்போதிருக்கும் புரிதலுடனும் அதற்குறிய கலைச்சொற்கள் தரும் திறப்புடனும் அனுகியதில்லையாரொருவரின் அதீத ஈடுபாடும் கூட அவரை வெற்றிக்கு அருகே கொண்டு நிறுத்திவிடுவதில்லை. காலம் என்கிற ஒன்று  கனியாமல் அரசியலில் என்று மட்டுமல்லாது அவற்றின் ஏறு படிகள் யாரின் கண்களுக்கும் புலப்படுவதில்லைஎனக்கு கிடைத்த வாய்ப்புகள் எனது தேடலின் பொருட்டு நிகழ்ந்தால் என்னவோ வெற்றி என்கிற அடியாளத்துடன் அதிலேயே நீடித்து இருக்க தேவைபடும் சமரசங்களை என்னால் ஏற்க முடியாது போனது.

வாழ்வின் யதார்த்தை பற்றி எனது பிற துறைகளை விட அரசியலில் நான் அடைந்த புரிதல்கள் அளப்பறியவை . இன்றுவரை விளங்கிக் கொள்ள முடியாதது ஒன்று உள்ளது என்றால் அது , எனக்கு அரசியலில் திறந்த அத்தனை கதவுகளும் எனக்கு வாழ்வின் புரிதலை கொடுக்க வல்லவையாக மட்டுமே இருந்தன .அது பிறர் எவரும் அடைய இயலாத உயரம் என்றாலும் , அது என்னை பிறர் எண்ணும் வெற்றி” என்கிற ஒற்றைக்கு அருகில்  அழைத்து செல்லவில்லை, ஆனால் என்னளவில் அவைகளில் நான் உணர்ந்தது வாழ்வியலின்  யதார்த்தம்”.எனவே எனது அரசியல் தேடுதலில் விளைந்தப் புரிதல்” என்கிற ஒன்றை கடந்து பிற எதையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை .

அதனாலேயே துரோகமும் ,கைவிடப் படுகையும் குரோதமும்,கசப்பும், வன்மமுமாக மாறி நிற்பது இத்துறையின் ஊழ் என்கிறபோதும் மனம் அலைக்கழியாது , அதை ஆழ்மனப் புரிதலால் மிக எளிதாக கடந்ததை  இப்போது எண்ணிப் பார்க்கிறேன் .

அரசியலில் நிகழ்ந்த புரிதல்கள் என்னுள் சிதறிக் கிடைத்தவை .பின்னாளில் இலக்கிய வாசிப்பில் வழியாக அவற்றை  நினைவில் கொண்டுவந்து  விரித்தும் தொகுத்தும் கொள்ள முயன்றபடி இருக்கிறேன்.இந்த வலைப்பூ தளம் எனக்கு அதைதான் நிகழ்த்திக் கொடுக்கிறது .செயலின் விளைவுகள் கருத்துக்களாக ஆழ்மனதுடன் உரையாடுபவை. அவைகளை தொகுத்து ஒரு தரிசனமாக கொண்டால் வாழ்கையை பதறாதே வாழ்ந்து நிறைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறேன்

அரசியல் உணர்ந்ததை வாழ்வின் ஏதாவதொரு சமயத்தில் எதிர் கொள்ளும் போது , கிடைத்த அனுபவத்தைக் கொண்டு வாழ்கையை இன்னும் அனுகி புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் , கசப்படைதல் என்கிற ஒன்று நிகழாமலேயே கடந்து போக இயலும் . இந்தப் பதிவுகள் எனது மனதிற்கு மிக அனுக்கமாக உணரும் என் அரசியல் செயல்பாடுகளை குறித்து அமைந்துவிட்டது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் விலக்கமுடியாத ஒன்று என்றே என்னளவில் நினைக்கிறேன்.தன்மயம்” என்கிற கோட்பாடிறகு இணங்க  சில காலம் கழிந்து இதறக்கெல்லாம் புது அர்த்தம் எழுந்து வரக்கூடும் .

எனது வாழ்கையில் நான் ஈடுபட்ட பல நடவடிக்கைகளில் எனது அரசியல் ஈடுபாட்டைத்தான் முதன்மையாக எப்போதும் எண்ணுவேன்எனது மனம் , புத்தி ,சிந்தனை,உடல் என சகலத்தாலும் ஈர்ககப்பட்ட ஒரு துறையாக அது எப்போதும்   இருந்திருக்கிறது. அரசியல் தத்துவமும் உளவியலும் பிணைந்த ஒன்று .அதனாலேயே நான் அறிந்து கொள்ள விழையும் துறைகளாக எப்போதும் இருந்ததை மிகத் தாமதமாக புரிந்து கொண்டேன்   .

மனம் . நான் என்னைக் கண்டடையும் முயற்சியில் அரசியலின் வழியாக என்னில் அது என்னவாக நிகழ்ந்தது என , அதை எழுத்தில் வெளிப்படுத்தும் போது என் மனதை மிக அனுக்கமாக உணர்கிறேன் . அதே சமயம் அதன் புரிந்து கொள்ள இயலாத பரிமாணங்கள் என்னை நடுக்குற வைக்கின்றன .நான் அறிந்த நான்” என்ற ஒன்று இல்லை என்பது அதற்கு காரணம் .உடலுடன் வாழ்வதை பல அறிஞர்கள் பாம்புடன் ஒரு கூரையில் துயின்றால் போல” என்கிற அவர்களின் கசந்த சொல்லாட்சியை நினைவுறுகிறேன்.அவை திடுக்கிட வைக்கும் உண்மைகள் .

இலக்கிய வாசிப்பே எனக்கு  மொழியை மீட்டுக் கொடுத்தது. வாழ்கையில் அடைந்த வருத்தமும் அதனூடாக அடைந்த கசப்புகளையும் எழுதி கடக்க இயலும் என எனக்கு இந்த வலைப்பூ தளம் புரியவைத்தது .எண்ணங்களை எழுதிக் கடக்கும் போது அவை என்னை விட்டு முற்றாக விலகுவதை அறிந்து கொள்கிறேன்.

எனது மரபான நம்பிக்கையை தக்க வைக்கும் முயலும் அதே சமயம் ,நவீன மனம் சிந்தனை வழியாக நான் அடைவது என்ன ? என்கிற இரண்டும் ஏக காலத்தில் எனக்குள் நிகழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன் .அது ஒரு அற்புதமான நிலை .

நான் எனது தேடலின் இறுதி பகுதிக்கு வந்து சேர்ந்திருப்பதை உணரமுடிகிறது .ஜெயமோகனின் வெண்முரசு” அதில் பெரும் பங்காற்றியது .எனக்கு மட்டுமே மிக அணுக்கமாக உணரப்பட்ட எனது நம்பிக்கைகளை அவரது எழுத்தில் பல சமயங்களில் பார்க்கும் போது மிக நுண்ணிய புரிதல்களை கொடுக்க வல்லவைகளாக இருக்கின்றது . அவரது சில கூற்றுக்கள் எனது மரபான மனதை சீண்டுபவையாக இருப்பவை .நான் அவற்றை  ஏற்க மறுத்தாலும் அற்றைக் கடந்தே என்னை அவற்றில் உள்ள பிறிதொரு கூற்றை கண்டடைகிறேன் என்பது மிகையல்ல .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக