https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அடையாளமாதல் - 456 * இயற்கையின் மாறுபாடு *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 456

பதிவு : 456 / 636 / தேதி 26 ஆகஸ்ட் 2019

* இயற்கையின் மாறுபாடு  * 


எழுச்சியின் விலை ” - 57
முரண்களின் தொகை -03 .




தொழில் குறித்த நுண்ணுர்வுகளும் ,  அது பற்றிய பிற முடிவுகளையும்  ஆழ்மனத்தால் உணரப்படுவது , விளக்கங்களை கோராதது, தானான புரிதலைக் கொண்டது , அதற்கென சில அடிப்படை கோட்பாடுகள் உள்ளது என்பதையும் , அதில் முழுமையுடன் ஈடுபடும் எவரும் அதை உள்ளாழத்தில் எங்கோ உணர்ந்துதான் இருப்பர்  . அது பற்றிய புரிதல் இல்லாதவர்கள் ஊழின் வசத்தால் அத்துறைக்கு தவறி வந்தவர்கள் . அவர்களுக்கு உணருதல் என்கிற ஒன்றை சொற்கலால் விளக்க முயற்சிப்பது வீண் நான் அப்போது அறிந்திருக்கவில்லை . உரையாடல் மூலம் நான் உணரும் எல்லாவற்றையும் எல்லோருக்கும்  புரியவைக்க இயலும் என்கிற எனது கோட்பாடு இங்கு தோற்றுப்போனது. எனது நண்பர்களுக்கு கடைசீ வரை அவற்றை என்னால் உணர்த்த இயலவில்லை.கராணம் புரிதல் காலத்தினாலானது. அது திறந்து கொடுக்காதவரை நம் உரையாடல் யாருக்கு எவ்விதம் பொருள் படுகிறதோ அது நாம் அவருக்கு சொன்னதாகிறது.

தொழில் குறித்த“கருத்தியல்கள்” தானான புரிதலுக்கு உள்ளாகுபவைகள் அவற்றை புறவயமான சொற்களைக் கொண்டு புரியவைக்க முயற்சிப்பது போல ஒரு மொண்ணைதனம் வேறொன்றில்லை  என்பதை  மிக தாமதமாக உணர்ந்தேன் .பிறருக்கு புரியவைக்க நான் முயன்ற ஒவ்வொரு முறையும் அவர்களின் இளிவரலுக்கு ஆளாக நேர்ந்தது .கூட்டு முறிவதற்கு அதுவே காரணமானது. என்னால் விளக்க முடியாத"புரிதல்" என்கிற ஒன்றை வாழ்வின் வெவ்வேறு சந்தர்ப்பத்தில்  பல காலம் கழிந்து அவர்களும் அதை உணர்ந்தார்கள் என்பது வேறு விஷயம்

எனது வாழ்வியல் சார்ந்த முடிவுகள் குறித்து யாரிடமும் ஆலோசனை பெற்றதில்லை .அவை அனைத்தும் உள்ளுணர்வு சார்ந்தே எடுக்கப்பட்டவை .முடிவுகளை எடுக்க புறவயமான தகவல்களுக்கு நான் காத்திருப்பதில்லை.எடுத்த முடிவுகள் எதிர் திசையில் பயணிக்கையில் என்னை தற்காத்து கொள்ள இதுவரை யாரிடமும் இறஞ்சி நின்றதில்லை. எனது முடிவுகளால்  விளையும் எதையும் திறந்த மனதுடன் அனுகுவது ஒன்றையே இது நாள் வரை செய்து வந்திருக்கிறேன். தன்மயவாதத்தை ஏற்பவன் அனைத்தும் தற்செயல்” என்பதை நிராகரிக்கிறேன்.தற்செயல் என ஒன்று இருக்குமானால் அது  "அறம்"  என்பதற்கு எதிரானது .ஒருவர் விழைவு வேறொருவரின் கொடுங் கனவு .முடிவுகள்  மாற்றத்தக்கது  என்றால் அதை மாற்றி அமைக்க நமது முயற்சிகள் வழி செய்கின்றன என்றால் என்றால் யாரும் தங்கள் வாழ்வியல் போக்கை நிர்ணயிக்க முடியுமானால் அது உலகின் பொதுப்போக்கை மாற்றாக கூடியது .   செல்வாக்குள்ளவர்கள் கூட அதிலிருந்து தப்ப முடிவதில்லை என்கிறபோது தேடி பெரும் தரவுகள்   மட்டும் எப்படி அவற்றை மாற்றிவிடும் போகின்றன .

புத்தி கூர்மையால் முடிவுகளின் பாதைகளை மாற்றி அமைத்துவிட்டதாக பலர் கூறுவதுண்டு . அது ஆற்றின் போக்கை மாற்றுவதைப் போல .ஒரு இடத்தில் நம் சொல்லுக்கு கட்டுபட்டதாக நடிக்கும் ஆறு வேறொரு இடத்தில் எண்ண இயலாத பாதிப்புகளை நிகழ்த்திவிட்டு செல்கிறது

வாழ்வின் இறுதிவரை உடன் வரும் மனம் இரக்கமில்லாததுநமது முடிவுகளில் இருந்து நமக்கு விரோதித்து விளைந்த அனைத்தையும் நம்மை பொறுப்பேற்க சொல்லுவது . குன்றி மன்றாடச் செய்வது , கழிவிரக்கம் கொள்ள வைப்பது, சுயகௌரவத்தை நிலைகுலைப்பது .அதில் சிக்கும் எவரும் உயிரிருந்தும்  , உயிரற்றவர்களே. அவர்களுக்கு அதிலிருந்து ஒரு நாளும் மீட்சியில்லை . முடிவுகள் நம்முடையதாக இருப்பினும் அது காலத்துடன் முயங்கியே முடிவுகளாக பரிணமிப்பவை, அதன் மேல் நமது முடிவுகள் நிலை கொள்பவை என்பது போல பேதமை வேறில்லை.

மனதிலிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள நிகழ்வுகளை கருத்துக்களாக மாற்ற கற்றுக் கொண்டது அரசியலில் ஈடுபட்ட பிறகு .அதிலிருந்த தத்துவம் , தர்க்கமும்  என அது உளவியலில் நிகழும் தாக்கம் குறித்த ஆவல் என ஆழ்மனதில் எங்கோ உணர்ந்தபடி இருந்திருக்க வேண்டும்  . அதை அடிப்படையாக கொண்ட அரசியல் என்னில் அதீத ஈடுபாடு ஏற்படுவதற்கு , அது முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் .இல்லாது போனால் எந்த அரசியல் பின்புலமும் அற்ற நான் அதில் தீவிரத்துடன் ஈடுபட வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை. விழைவுகள் ஆழ்மன தேவையால் நிகழ்வன என்பதை மிகத் தாமதமாக உணர்ந்தேன் .

மானுட உளவியலை இலக்கியங்கள் பல கூறாக தனித்தும் தொகுத்தும் கொடுத்திருந்திருப்பதை , அரசியலின் நிகர் வாழ்வின் கணங்களில்  நின்று பார்த்து அவற்றை பொறுத்தி உணர்ந்து புரிந்து கொள்வது போல இனிது  வேறொன்றில்லை  அரசியல் பல்வேறு உலகியல் கூறுகளை நேரடி அனுபவத்தின், வழியாக அறிதல் அவைகளை இன்னும் நுணிகி அறிய இயலுவதுவாழ்வின் பல பரிமாணங்களை உணரும் ஒருவர்  அடையும் வாழவியல் திருப்தியுறுகைக்கு நிகரான வேறொன்று இருப்பதாக நினைக்கவில்லை . பல வழிகாட்டியாக , அறிவுத்துவதாக இருந்தாலும் அவை அனைத்துமே சாமான்யனின் நிகர் வாழ்கையை நுண்மையாக உணராமல் போனால் அது வாழ்கையில் பிரதிபலிப்பதில்லை .

பல்வேறு தளங்களில் ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கும்  கருத்தியல் முரணியக்கத்தின் விளைவுகள்  அரசியலில் வெளிப்படும் போது அது  மானுட போக்கை நிர்ணயிக்கிற வல்லமையை அடைந்து விடுகிறது .ஏறக்குறைய ஒவ்வொருவரின் வாழ்கையில் ஏதாவதொரு தருணத்தில் ஏற்படும் அதன் பிரதிபளிப்பை தவிர்க இயலாது. யார் எடுக்கும் எவ்வகை முடிகளும் அவற்றை ஒட்டியும் , அல்லது அதற்கு எதிராக பயணிப்பது என வாழ்கையை நடத்திச் சென்றாலும், அது தனி ஒருவனுடைய சிந்தனையில் மட்டும் நிகழ்வதல்ல ஒட்டு மொத்த ஜனத்திரளின் மனநிலையின் தொகுப்பே அதிலிருந்து கிளைத்தவையாக , அதிலிருந்து ஒரு துளி ஒவ்வொருவரின் ஆழ்மனத்தில் அது வேர்விட்டு பரந்திருப்பதை பார்த்திருக்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்