https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

அடையாளமாதல் - 455 *விடுதலையை உணர்தல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 455

பதிவு : 455 / 635 / தேதி 22 ஆகஸ்ட்   2019

*விடுதலையை  உணர்தல் 


எழுச்சியின் விலை ” - 57
முரண்களின் தொகை -03 .





ஆழ்மனத்தின் தேவைகள் ஒருவித ஈர்ப்பைப் போல உருவாகி வருபவை ,  அது உள்ளுணர்வு என்கிற கருதுகோளாக உணரப்பட்டோ , அதை கடந்தும் செயல்படுவைகள் போலும் .நாமறிந்து கொள்ள இயலாத பிரபஞ்ச விரிவில் இழை இழையாக பிணைக்கப்பட்டு இயங்கும் ஒரு மாபெரும் வெளிப்பாட்டின்  ஒரு சிறு கூறே உள்ளுணர்வு என உணர்வது . மனம் ஆழ்மனதில் உறையும் படிமங்களின் வெளிச்சம் பாய்ச்சுபவை .கடந்து வந்த வாழ்க்கையை ஒரு கால இடைவெளிக்கு பிறகு திரும்பிப் பார்க்கையில் அந்த இழைகளை அறிந்து கொள்ளும் வாய்பை சில சமயம் பெறுகிறோம். அது இயற்கை மிக அரிதாக சில சமயம் தன்னை திறந்து கொடுக்கும் போது அதை உணரலாம் .அவற்றின் ஒன்றில்  இன்று இயங்கிக் கொண்டிருக்கும் அதன் பிரதிபலிப்பை , அன்று நமது ஆழுள்ளம் உணர்ந்திருந்ததை அறிய முடியகிறது .

காலம் நாம் அறியாத அதன் தேவைகளை நமது இனம் புரியாத விழைவின் வழியாக நமக்குள் அவற்றை நிகழ்த்திக் கொடுக்கிறது.அவை பல வித ஈர்ப்பின் வழியே நம் சிந்தனையாக  எழுகிறது . உடலில் ஏற்படும் அதன் ரசாயன மாற்ற உந்துதலால் நம்மை அது செலுத்துவது போல .அந்தத் தேவையை நிறைவு செய்ய நாம் ஏனென்று அறியாத அதை ருசியின் நுகர்வு என நகர்த்தப் படுகிறோம் .உளவியலும் ஒருவகையான உடல் தேவையையின் கணக்கிட்டை கொண்டே நிகழ்வது  .அது பற்றி நாமறியாத விசை நம்மை இயக்கி வைக்கிறது போலும்.

வாழ்வியலில் நிகழும் சம்பவங்களையும் அவற்றை நிகழ்த்தும் , எதிரிகளை புரிந்திருக்கும் வகைமையில் நமது உறவு மட்டும் நட்பையும் எவ்வாறு கருதிக் கொள்வதில்லை. அது குறித்த தெளிவான புரிந்தலே வாழ்கையின் பொறிகளில் சிக்கிக் கொள்ளாது கடக்க வைப்பவை .அந்நிகழ்வுகளை கருத்தாக மாற்றிக் கொள்ளாதவரை அவற்றில் இருந்து வெளிவர பாதைகள் கண்களுக்கு புலப்படுவதில்லை .அனைத்தையும் புரிந்து கொள்ள , அதனுடன் இணைந்து ஒழுக அவை குறித்த கருத்தியலை உருவாக்கி கொள்ளவதின் வழியாக ஆர்பரிக்கும் மனதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிகிறது.கருத்தியல்கள் தத்துவம் மற்றும் தர்க்கத்தை கொண்டு உருவாகி வருவது .

எனது வாழ்கை குறித்து எல்லோரையும் போல எனது தந்தையின் முடிவு இறுதியாக இருந்தது குறிபிட்ட சில காலம் வரை. எனது இருபத்தி மூன்றாம் வயதில் நான் தனித்து எனது தொழில் துவங்குவது குறித்த முடிவு எடுத்த போது தனது கருத்தியலை என்னுள் செலுத்துவதை அவர் நிறுத்தி கொண்டார் .நான் துவங்கிய நிறுவனத்தை அவர் வந்து திறந்து வைக்க வேண்டும் என்கிற எனது விண்ணப்பத்தை மிக அழகாக அவர் மறுதளித்தை இங்கு நினைவுறுகிறேன்.அது எனக்கு எல்லாமான உலகை திறந்து கொடுத்தது.

அவருக்கு நான் புது தொழில் துவங்குவதை விட அதை நண்பர்களுடன் கூட்டாக நான் உருவாக்குவதை  இரண்டு கருத்துக்களால் எதிர்த்தார் .ஒன்று கொள்ளைக்கு சென்றாலும் கூட்டு உதவாது என்பது .இரண்டு அவரது விருப்பத்தை மீறி எனது முடிவை நான் எடுக்கும் சுதந்திரம் எனக்கு உண்டென்றால் , தனது கருத்தை எடுக்க அவருக்கும் அதே உரிமை இருப்பதாக அவர் சொன்னது என்னை திகைக்க வைத்தது .விளைவு அம்மா வந்து எனது புது நிறுவனத்தை துவங்கி வைத்தார் . அதில் அப்பா சொன்ன முதற் கருத்தியல்  கூட்டு உதவாது”  என்ற அவரின் கோட்பாடு வென்றது .

பிற்பாடு கூட்டு முறிந்து பெரும் நஷ்டத்துடன் அதிலிருந்து வெளியேறி ,நான் தனித்து அந்த தொழிலை தொடர முடிவு செய்து அதை ஒரு வித கூச்சத்துடன் எனது தந்தையிடம் சொன்னபோது , அவர் என்னை எள்ளலுடன் எதிர் கொள்வார் என்கிற எனது அச்சத்தை கடந்து , நடந்தவற்றை என்னிடம் வினவாமல் , மிக லகுவாக எடுத்துக் கொண்டு அவர் ஆறுதலாக சொன்ன வார்த்தை எனது எஞ்சிய வாழ்கையை மனநிறைவுடன் தொடர வைத்தது .

எவ்வளவு நஷ்டமடைந்தாய் என கேட்காமல் , அவற்றை புத்திக் கொள்முதல்”  என எடுத்துக் கொள் என அவர் சொன்னது என்னை புதிய உலகத்திற்கு இட்டுச் சென்றது. கருத்தியல் கோட்பாடுகளே வாழ்வியலை புரிந்து கொள்ளச் செய்பவை என அவர் எனக்கு உணரவைத்த தருணம் அது.கூப்பிட்டும் வரவில்லை என வருந்துவதற்கு பதிலாக அது அவரை புரிந்து கொள்ள வைத்தது .அவரவர் தங்களின் இருப்பையும் , முடிவையும்  பிறர் புண்படாது புரிந்து கொள்ள வைப்பது என அறிந்து கொண்டேன் .

அவர்தான் எனக்கு கருத்தியல் என்கிற கருதுகோளை அறிமுகம் செய்து வைத்தார் . அது குறித்து நான் உணர்ந்து கொள்வதற்கு முன்பாக எனது ஆழுள்ளம் அறிந்திருந்தது போலும் .அந்த சொல்லாட்சியை அறிந்து நான் என்னை வகுத்து கொள்ளவில்லை , ஆனால் என்னையும் கடந்து நான் அதை செய்து கொண்டிருந்தேன் என இப்போது உணர்கிறேன்.

அந்த சந்தர்ப்பத்திற்கு பிறகு எனது முடிவுகளில் என் தந்தை தலையிடுவதில்லை . அதற்கு அவசியமில்லை என அவர் நிலைத்திருக்கலாம் .அன்றிலிருந்த இந்த நொடிவரை எனது வாழ்வின் பாதையை நான் முடிவு செய்தேன் .நான் அறியாத காலத்தின் கோட்பாடுகள் எனது முடிவுகளில் எதிரொளித்த போதும் , அதன் யதார்த்தத்தை கருத்தியல் மூலமாகவே புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன் .வாழ்வியலில் நடக்கும் அனைத்தையும் நான் உருவாக்கி வளர்த்துக் கொண்ட கருத்தியல் என்கிற  புரிதலின் வழியாக அவற்றை கடந்து செல்ல முயன்றபடி இருக்கிறேன்.எனக்கு நிகழ்வதற்கு நான் யாரையும் பொறுப்பாக்குவதில்லை . அதனால் கசப்படைவதில்லை . இது இவ்வண்ணம் நிகழ வேண்டும் என ஊழ் வகுக்கிறது போலும் என அவற்றை கடந்து செல்வதை எனது வழிமுறையாக கொண்டிருக்கிறேன் .அது கொடுக்கும் விடுதலை உணர்வு அளப்பறியது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...