https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 20 செப்டம்பர், 2025

வெண்முரசு கூடுகை 86 எனது உரையின் எழுத்து வடிவம்

 








இந்த பகுதியை இரண்டாக பின் முன் என தொகுத்துக் கொள்கிறேன்.

1.இன்று தத்துவம் இலக்கியம் இரண்டும் சென்று இணையும் போது உருவாகி தொடுகிற எல்லை இந்த முப்பது நாற்பது ஆண்டுகளின் உச்சம் மேலை நாட்டு தத்துவம் ஒன்றை ஒன்று நிராகரித்து நிராகரித்து  நிலைநின்றது . ஆனால் இந்திய தத்துவம் ஒவ்வொரு முறையும் ஆழ வேரூன்றப்பட்டு அந்த கால கட்டத்தில் பொருத்தி பொருள் கொள்ளத் தக்கது. காரணம் இங்கு மதம் அந்த த்ததுவங்களின் வேர்களில் அமர்ந்திருக்கிறது அதனால்  

வெண்முரசு மீறலை நிராகரிப்பை முன் வைக்காது அதன் அத்தனை elements களையும் உள்வாங்கி இந்த காலத்திற்கும் மட்டுமின்றி இன்னும் வர இருக்கின்ற காலத்திற்குமான புரிதலை கொடுக்க முயல்கிறது. வரலாறு வளர்சிதை மாற்றம் வழியாக உருக் கொள்கிறது. புராணம் அதற்கு உட்பட்டது.காரணம் புராணம் ஒரு தொல் வரலாறு என்பது நம்பிக்கை. காலத்திற்கு ஏற்ற படி அது மீள மீள நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதற்காகவே வெண்முரசின் தேவை .வளர்சிதை மாற்றத்தை ஒரு கருதுகோலாக வைத்தால் அதற்கு இடையே ஒன்றான பேர் இருப்பை முன் வைப்பது இலக்கியம் மட்டுமே. இலக்கியம் பொது மனிதம் என்கிற கருதுகோள் எதன் அடிப்படையில் செயல்படுகிறதுஅதன் விசை என்ன என்பதை எடுத்து வைக்கிறது .

நேற்று நாளை இவற்றுடன் இன்றை கொண்டு இணைக்கிறது இலக்கியம். அந்த இழையை மிக நுண்மையாக அவதானிக்க இலக்கியம் தேவையாகிறது.அது வாரலாறும் அதன் ஆளுமைகளும் தங்களை வெறும் திரளாக புள்ளவிவர கணக்காக பார்ப்பதால் சமூகத்திற்கு உருவாகும் இழப்பு வெறுப்பு கோபம் பெறாமை என அனைத்தும் கலந்து வெளிப்படும் ஒன்று உண்டென்றால்   அது பகடி, அங்கதம் என பட்டு பூச்சு இட்டாலும் அதன் அடியில் இருப்பது இளிவரல் என்கிற நுண்மை வழியாக வெளிப்படுகிறது

இளிவரல் வழியாக மிக எளிதில் சாமாண்ய மக்களைபெரும் ஆளுமைகளுக்கும் அதன் வழியாக சொல்லப்படுகிற செய்து மிக காத்திரமானது.உலகம் பாக்டாரியாவினால் ஆனது புதிய பிரபஞ்ச தரிசனம் இன்று நம்மை எப்படி திடுக்கிட வைக்கிறதோ அது போல அது தன் தேவைக்கு பிற உயிர்களை உலகில் உருவாக்கி வாழவிடுகிறது என்கிற எளிய மனிதர்களின் எண்ண வெளியில் தம்மை பற்றிய இளிவரலுக்கு பின்னால் இருப்பது நம்மை தொந்தரவு செய்கின்றன. தங்களை சுற்றியுள்ள அந்த எளிய மானுட சமூகத்தை அஞ்சியே முறைமை, சம்பிரதாயம் ,அறம், கோட்பாடு என வகுத்துக் கொண்டு அதற்கு  பின்னால்  இருந்தாலும் ஒவ்வொரு மீறளுக்கு எதிராக பேருருவம் கொண்டு நிற்பது எளிய மானுட வடிவம் என்கிற விராட ரூபம். அங்கதம் அல்லது இளிவரல். அதை உருவாக்கி நிகழ்த்தி அழிக்கும் சக்தியாக அது எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது இந்தப்பகுதிகளை பலவாக பிரித்துக் கொள்ளலாம் ஒன்று கர்ணன் ஒவ்வொரு முறையும் தன்னை மிக எளிய இடத்தில் வைக்க முயல்வதும் அது நிகழாது போவதுதொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. புராண லக்ஷணம் பல சுவை கொண்டது. வெண்முரசில் அங்கத சுவை பல இடங்களில் வந்திருந்தாலும் இங்கு அது இளிவரல் சுவையாக வைக்கப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் இளிவரல் உண்டா என கேட்டுக் கொண்டால் …..ஆம் உண்டு அதை ஆழ்வார் பாசுரங்களின்்வழியாக பார்க்கலாம்.

கற்பார் ராம்பிரானையல்லால் மற்றும் கற்பரோ .என ஒரு பாடலில் சொல்லும் ஆழ்வார் கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல்லால் மற்றும் கேட்பரோகேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்  சேட்பாற் பழம்பகைவன் சிசுபாலன் திருவடி  தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே.அதன் குறியீடு மிக ஆழமானது 

கர்ணன், ஜெயத்ரதன், சிசுபாலன், ஜராசந்தன்,துரியன், அரங்குசொல்லி  என ஐந்து கதாபாத்திரம் அதை எப்படி கையாள்கிறது அவர்களின் உள மற்றும் உணர்வு நிலை அது சென்று தொடும் ஆழம் என அது திரிபடையும் இடம் என பலவாறு வகுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.கர்ணன் ஒரு வகை என்றால் அதன் பிறிதொரு வகை ஜெயத்ரதன். கர்ணன் தன்னை எளிமையும்அவமானமும் படுத்தும் தோறும் நிகழ்வனவற்றில் அங்கீகாரத்தால் திடுக்கிடுகிறான் பின்னர் சீண்டப்படுகிறான் தன் முன் முடிவை விமர்சிக்க தயங்காதவனாக எந்த இளிவரலையும் துணிந்து ஏற்கும் மனநிலை கொண்டவனாக தன்னை மதிப்பிடுகிறான் பின்னர் ஒவ்வொரு முறையும் அது பிழை மதிப்பீடுகள் என அறிந்து திகைக்கிறான்.ஜயத்ரதன் முதிரா சிறுவனாக வெளிப்பட்டு இளிவரலால் அல்லாடுபவனாக திரும்ப முடியாத எல்லைக்கு செல்கிறான்

துரியன் அந்த அவதூறு இளிவரல்களை மிக இயல்பாக கடக்கிறான். அவர்களைபச்சை ஊண் உண்ணும் கானாடிகள்மிருகம் என வகை படுத்துகிறான் அதை  அடுத்து சொல்லி முறைமை அறிந்தவர்கள் அவர்களுடன் சொல்லெடுக்கு முடியாது என கடந்து செல்கிறான். துரியனின் இந்த சம நிலை இந்த பகுதிக்கு பிறகு அவனது ஆளுமை  வீழ்ச்சி அடைகிறது. ராமாயணத்தில் இருந்து ஒரு குறியீட்டை கடத்த முடிந்தால் அது துரியனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து கை மாற்றப்பட்டு வருகிறது. ராமயணப் போரில் கும்பகர்ணன் இறப்பிற்கு பின் விட்டுச் சென்ற பெரும் கதை போரின் போது அனுமன் கையிலெடுக்கிறார். ராமன் தரப்பில் போரில் ஆயுதம் எடக்கப்படுவது இங்கு மட்டுமே. அந்த காட்சி மட்டுமே அனுமனை பார்க்கும் இடமெல்லாம் அப் பெருங்கதையோடு இணைக்கிறது அதற்கு முன்பும் பின்பும் அனுமன் கதை எடுத்ததாக ராமாயணத்தில் இல்லை. பின்னர் வெண்முரசில் அனுமன் ஆலயத்தில் துரியனின் பிறப்பு சூழலில் கண்டெடுக்கப்படுகிறது கதை மகாபாரதப் போர் சூழலில் பால்ஹிகர் கையிலெடுக்கிறார்அந்த போரில் அது சிதைந்து வெரும் தண்டென ஆகிறது இறுதி நாள் போரில் அதை பீமன் எடுக்க அந்த  தண்டத்தால் துரியன் இறப்பு நிகழ்கிறது. இந்த தொடர்ச்சி ஏன் வெண்முரசில் வருகிறது என கேட்டுக் கொண்டால் இரண்டு விஷயங்கள் வரும் ஒன்று கதையின் வளர்சிதை மாற்றம் ஒரு தொடர்ச்சி வழியாக வருவதை பார்க்க முடிகிறது.அரக்க குருதியாக ஸ்தூன கர்ணன் துரியனை சம பாக உடற் கூறு அதாவது நிகர்நிலை சிலை தன்மை என  உருவாக்கு கிறானா என்பது கேள்வி. அரக்க குணம் என்பது ஒரு வகை நிகர் நிலையா?

சிசுபாலன் மற்றும் ஜராசந்தன் துரியன் சொன்ன விலங்கு மனிதர்கள் .பிறப்பில் மனித வரையறை மீறப்பட்டு பின் மனத உடல் எடுக்கிறார்கள். அது ஒரு குறியீட்டு செய்தி. ஜராசந்தனும் , சிசுபாலனும் ஒரு சேர்கை மனிதர்கள் என்பதால்பிளவுபட்ட உடலைப் போல  மனநிலை உள்ளவர்கள் என்பதால் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாகிறார்கள் . அதனால் அவன் சந்திக்கும் சக ஆளுமைகள் பற்றிய தனது கீழ்மையான எண்ணத்தை மட்டுமே அவனால் வைக்க முடிகிறது. சிசுபாலன் ஜரசந்தனை போலவே மானுட உடலுடன் வந்தவன் அல்ல மூன்று கண் நான்கு கைகளுடன் பிறந்தவன் யாதவ குல அழிவின் சிண்ணமாக பார்க்கப்படுகிறான். கண்ணன் கை பட்டதும் இயல்பு நிலை திரும்புதல் என்பது அவனது ஆற்றலை இல்லாமலாக்குகிறது. பின் அவனது அழிவு எள்ளையிடப்படுகிறது

இளிவரல் நாடகம் வழியாகஒட்டு மொத்மாக புது நகர் கால் கோள் விழாவில் அனைவரின் ஆணவமும் ஏளனம் செய்யப்படுகிறது. “வெய்யோன்பகுதி 9-இல் வரும் இளிவரல் நாடகம் (பெரும்பாலும் கிராம மக்கள்,பரிமாறும் காட்சிகள், முகமூடி, நடிப்பு, சிரிப்பும் ஏளனமும் கலந்த நிகழ்ச்சி) சின்ன விஷயம் போலத் தோன்றினாலும் அது ஆழமான குறியீடாக நிற்கிறது.இளிவரல் நாடகம் குறிக்கும் பொருள் உலகில் பெரும் அரசியல் நிகழ்த்தப்படுவது எளிய மானுடத்திரளால். அனைவரும் அஞ்சுவது அவர்கள் என்றோ ஒரு நாள் எழுவார்கள் என்று. காமம் கோபம் வஞ்சம் போல அறம் மனித இயல்பல்ல. அதுவே அறத்தை மீள மீள இந்த உலகில் கோடிக் கணக்கான நூல்கள். வழியாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் நீண்ட நாட்களுக்கு முன்பு 

The book of Eli . Denzil Washington நடித்த படம் அதில் ஒரு ஊரை ஆயுத பலத்தால் கட்டுப்படுத்தும் மனிதன்  அவை தீர்ந்த நிலையில் ஊரை கட்டுக்குள் வைக்க முற்றும் அழிந்து போன பைபிலை தேடுகிறான் .இது ஆன்மீகம் மற்றும் மக்களை குறித்த அங்கதம் என எடுத்துக் கொள்ளலாம் அல்லது அதன் ஆழமான உள் குறியீடுகளை புரிந்து கொள்ள முயலாம் என இரண்டு வழிகள் இருக்கின்றன.சிசு பாலன் கீழ்மை வசவுகளுக்காக கண்ணன் அவனை கொல்வது இன்னொரு உச்சம்இளிவரல் நாடகம் வீரனின் மனத்தைச் தன் முன் நிறுத்தி சோதிக்க செய்கிறது கிண்டலால் அஹங்காரத்தை உருக்கி பற்றி எரிய வைக்கிறது.அதே சமயம் மனநிலையை சமநிலை கொண்டு வரச் செய்யும் ஒரு தவம் அடுத்த கட்ட மாயை உலகுக்குள் செல்லும் தொடக்க சடங்கு இப்படிப் பட்ட நாடக காட்சிகள் பல இடங்களில் உள்ளம் அழுக்காற்றை சுத்தம் செய்யும் இடைநிலை சடங்காக வருகின்றன.

இதையும் அப்படியே பார்க்கலாம்கர்ணன் நாகர்களைச் சந்திக்கத் தயாராகும் பகவான்-பாதையின் முதலடி.மொத்த குறியீடு இளிவரல் நாடகம் முழுவதும் கர்ணனின் உள்மனப் பரிசோதனைவேடம்: வாழ்க்கையின் பொய்யான தோற்றங்கள். நாடகத்தில் பாதி முகம் உருபெற்றவன் ஒரு சிறந்த குறியீடு சிரிப்பு: எளிமையான சமூகம் பெரும் ஆளுமைகள் மீதான உள்ளீடு அசட்டுத்தனம் மீதான வெறுப்பு கர்ணன் சமாளித்தல்: வீரன் தனது மனதை நிலைநிறுத்திக் கொள்வதுஅத்திமரம் தீப்பற்றி எரியத்தொடங்கியது. புகை எழுந்து அவையை மூட விண்ணிலிருந்து இடியின் பேரோசைதத்த தய தத்தஎன்று முழங்கியது.”  அத்திமரம் . கொடு என்பதை பல தளங்களில் சொல்லும் வேத மந்திரம் இந்திரன் அங்கே அமர்ந்து உபதேசம் செய்வதுவீரனுக்கான வேதம் வாசிப்பது போல. அது கர்ணனை சீண்டுகிறது

வாழ்வியல் தருணங்களை இலக்கியத்தின் வழியாக அறிய முயல்வது போல எளிய மக்கள் திரள் அதில் பிறிதொரு பங்கு வகிக்கிறது. அவர்கள் அரசியல் நேரடியானது என்பதால் நெருப்பென சுடுவது. அதன் மொழி எப்போதும் இளிவரல் அதற்கு யாரும் தப்ப இயலாது என்பதன் அதன் உட்கூறு. நாயகர்கள் அஞ்சுவது அந்த இளிவரலுக்கு. இங்கு அது நாடகத்தின் வழியாக முன் வைக்கப்படுகிறது. அதன் கருத்து மிக ஆழமானது என்பதால் அதன் ஏற்பு தன்மைய உருவாக்க மைய நாயகர்களை அந்த இளிவரலுக்குள் வைத்து துவங்கி பின் அனைவரையும் அதனுள் இழுத்துக் கொள்கிறது. நகைச்சுவை கடந்து செல்லக்கூடியதாக தோன்றினாலும் அது அவ்வளவு எளிதில் கடந்து போக இயலாது

2.முதற் பகுதியில்.மானுடர் உருவாக்கிய கலையின் உச்சம் இங்கு நிகழ்கிறது. அடுக்கடுக்கான நிலைகளின் வழியாக தெய்வங்களை உயர்த்திக் கொண்டு சென்று விழைவின் தெய்வமான இந்திரனை சென்றடைகிறது. அதன் கரவு பாதையில் கர்ணன் ஆலையத்திற்குள் நுழைகிறான். கோவில் முப்பிற்கு வரும் போது பிறிதொரு உலகை சுவாசிக்கிறான் அது அந்த கோவிலுன் வாசம். மானுடர் உருவாக்கிய இழி நிலையை அதன் மறு எல்லையில் வைக்கப்படுகிறது

புதுவை வெண்முரசு கூடுகை 86 சில தருணங்கள்

 



















புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...