https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 17 மே, 2019

புதுவை வெண்முரசு கூடுகை 26




பதிவு : 616 / தேதி 17 மே  2019


வெண்முரசு:3-வண்ணக்கடல் பகுதி ஆறு 26 - 36 பதிவுகள் வரை


இன்றைய பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை மூன்று , பகுதி 6 , அதில் 26 தொடக்கமாக 36 ஈறாக 11 பதிவுகள் 
நினைவுகள் நீரையும் , அனலையும் தரக் கூடியது , ஒன்று தன்னுள்  வளர்த்து பெருக்குவது , மற்றொன்று அதை வற்றி சுறுங்க வைத்து உடல் ஓட்டிலிருந்து பிறிந்து விலகி நிற்க வைப்பது  .

வெண்முரசு வியாச பாரத த்தின் இடைவெளிகளை நிரப்புவதற்கானது . அது காலத்தில் பலவிதங்களில் நிரப்பி வந்திருககிறது .பத்தாம் நூற்றாண்டில் அது வேதமாக புரிந்து கொள்ளப்பட்டது , அதை அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் , வாழ்வியல் முறையின் சிக்கல்களை, தத்துவவரிவுகளை  கொண்டதாக புரிந்து கொள்ளப்பட்டது.இருபத்தியோராம் நூற்றாண்டின் அதன் பொருள் புரிதலின் வகைமை , மானுட உளவியலை மையம்படுத்துவதாக இருக்கிறது. இதுவே அடுத்த நூற்றாண்டில் நரம்பியல் பற்றியதாக உருவெடுக்கலாம்.

தத்துவ பிடிமானம் பலருக்கு வயோதிகத்தில் புதிய புரிதல்களை கொடுப்பதை கனிதல் என எடுத்துக் கொண்டாலும் , வயோதிக நரம்பியல் முடுக்கிழத்தல் என புரிந்து கொள்ளும் காலம் வரலாம்வெண்முரசு நூல் விரிவு மனித உளவியல் குறித்து நுட்பமான பார்வையை கொடுக்கிறது என்றே நான் நினைக்கிறேன்

வியாச பாரதம் இக்கால மனிதர்களுக்கு சொல்ல விழைவது என்ன?.அது மானுட அறம் பேசிய காலம் , வாழ்வியல் தருணங்களை மிக அருகில் கொண்டுவைத்த காலம் என விரிந்து , இன்று அது மானுட உளவியல் நுட்பங்களை பேசுகிறது . வெண்முரசின் இடம் அதுவாகத்தான் இருக்க முடியும் .ஊழுக்கு இடம் கொடுக்கும் மானுட ஆணவத்தையும் அது அவனுக்கு கொடுக்கும் வாழ்வியல் சந்தர்பங்களை மிக விரிவாக சொல்லும் இடமாக இந்தப்  பகுதி இருக்கிறது.

26 பிரபஞ்ச சிருஷ்டி , பரத்வாஜர் குருகுலம்.துரோணர் பிறப்பு அவருக்கான இயல்பை காலம் உணர்த்துவதும் , அவர் தான் வேறுபட்டதாக உணர்வதும்.

27 பிறர் அவமதிப்பதை கடக்க தன் இயல்பிற்கு மாறுபட்டு தனக்கென ஒரு வடிவத்தை சமைத்துக் கொள்ளுதல் .
28  ஆணவத்தினால் துருபதனை தன் மாணவனாக அடைதல் 
29 அக்னிவேசரின் மறைவு , துரோணரை அவரின்  ஊழ அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.
30 துரோணர் சரத்வான் ஆசிரமத்தை அடைதல் , கிருபியை மணம்முடித்தல்.
31 குருகுலம் அமைத்தல் .அஸ்வத்தாமன் பிறப்பு .அவனது பிறவி நூல் கணிப்பு , அஸ்வத்தான் யானையின் பிறப்பு 
32 அஸ்வத்தாமனைப் பற்றிய இளமைக்கால குறிப்புகள்.துரோணரின் ஏழ்மையும் மனைவியின் வசைச் சொல்லும் .
33துழோரணர் துருபதனை சந்திக்க செல்லுதல் 
34 துரோணர் துருபதனால் அவமானமுறுதல்
35 துரோணர் குசையை சந்தித்தல், வடவத்தீயை பெற்றுக் கொள்ளுதல் .
36 இளநாகன் பயணம் அரசப் பெருநகர் .

உடலின் நிலையழிவும் கொந்தளிப்பும் உள்ளத்தில் நிகழ்பவை. உள்ளம் நிலைபெறும்போது உடல் நிலைபெறுகிறது. ஆனால் உள்ளத்தைப்பற்ற நம்மால் முடியாது. இருந்த இடத்தில் இருந்தே பிரபஞ்சத்தை அறியும் அகல்சுடர் போன்றது உள்ளம். அது வழிகாட்டினாலும் , விழைவு ஆவணத்தில் நிறுத்தி வேறு பாதைகளை திறந்து கொடுக்கிறது .

ஆனால் ஒரு களத்தில், நாம் விழையும் நேரத்துக்கு மட்டும் நம்மால் உள்ளத்தை நிலைபெறச்செய்ய முடியும். உடலே உள்ளமென்பதனால் உடல் நிலைபெறும்போது உள்ளமும் நிலைபெறுகிறதென்பதைக் காணலாம். உடலை கைவசப்படுத்துபவன் உள்ளத்தை வென்றவனாவான்” கிருபர் சொன்னார்.

புல்லை அறிக. புல்லை அறிந்தவன் இப்புவியை அறிந்தவனாகிறான் என்கிற சொல்லில் தனுர் வேதம் நிலை கொள்கிறது .பிற வேதங்களை காப்பாற்றி கொடுத்த சமூகம் தனுர்வேதத்தை இழந்து போனது .இன்றைய பூஜா விதானம் தனுர் வேத த்தின் பகுதியாக தர்பத்தை கொண்டிருக்கிறது.வழிபாட்டின் ஒரு பகுதியான சமர்ப்பித்தல் , இதன் நுண்ணிய பகுதிகளை சொல்லவந்தது.

ஒவ்வொருமுறையும் அவர்களின் விழிகளில் மின்னிச்செல்லும் வியப்பு அவனில் நஞ்சூட்டப்பட்ட அம்புபோலத் தைத்தது. நாட்கணக்கில் அவனுக்குள் இருந்து உளைந்து சீழ்கட்டியது. . துரோணர் தனக்காக ஒரு உடல் மொழியை உருவாக்கி அதை கடந்து செல்ல முயல்கிறார் .அவர்களை வெல்லும் ஆணவமே யஞ்யசேன னை மாணவனாக ஏற்கச் செய்கிறது.

யஞயசேன ன் அரசு சூழ்தலால் தனக்கான வாய்பபை அறிந்து அதன் வழி செல்கிறான்.துரோணர் அதற்கு பலியகிறார் அக்கணத்தில் அவனுடைய விழி தொட்டு எடுத்த ஏதோ ஒன்றை சித்தமறியாமலேயே ஆன்மா அறிந்துகொண்டது

அது என்ன? தன் அகத்தின் அறைகளை துழாவிக்கொண்டிருந்த யக்ஞசேனன் ஒருநாள் கனவில் அதை மீண்டும் கண்டு எழுந்தமர்ந்தான். அன்று கங்கைக்கரைப்பாதையில் வந்துகொண்டிருந்த துரோணன் தன் சுரிகுழலில் இருந்து சொட்டிய நீர்த்துளி ஒன்றை அனிச்சையாக தன் வலதுகையின் சுட்டுவிரலால் சுண்டி உடைத்து அதன் நுண்சிதறல்களில் ஒன்றை மறுகணமே மீண்டும் சுண்டி தெறிக்கச்செய்தான். அதையுணர்ந்த கணத்திலேயே யக்ஞசேனனின் ஆழம் துரோணனின் உதடுகளில் அதிர்ந்துகொண்டிருந்தது காயத்ரி என்றும் அறிந்தது.


துரோணன் குனிந்து அந்த மண்ணை அள்ளி நாவிலிட்டு உவர்மண்” என்றான். இத்தனை உவர்க்கும் மண்ணில் புல் முளைக்க வாய்ப்பில்லை. சம்புகர் அது விருத்திராசுரனின் குருதியில் இருந்த உப்பு” என்றார். துரோணன் புன்னகையுடன் அவ்வாறெனில் அதுவே” என்றான்”

கரையில் நின்றிருந்த துரோணன் மரக்கிளையில் வந்தமரும் பறவைபோல அவ்வெண்ணத்தை அடைந்தான். சம்புகரே, இதேபோன்ற ஐந்து குளங்கள் வேறெங்காவது உள்ளனவா?” என்றான். இல்லை. நானறிய ஏதுமில்லை” என்றார் சம்புகர். இருக்கின்றன. நான் அறிவேன். எங்கோ. வடக்கே இமயத்தில். அல்லது தெற்கே விரிநிலவெளியில். அங்கிருக்கிறார் பரசுராமர்” என்றான் துரோணன்.

இலைகள்மேல் விழுந்துகிடந்த ஒளிவட்டங்கள் ஒவ்வொன்றாக விழிமூடின.
ஊழ் , ஆணவத்துடன் ஊடியே தனது இலக்கிற்கு ஒருவனை கடத்துகிறது .ஆகவே அது மட்டுமே ஒருவனை தனித்து செலுத்துவதில்லை.

26 பிரபஞ்ச சிருஷ்டி , பரத்வாஜர் குருகுலம்.துரோணர் பிறப்பு அவருக்கான இயல்பை காலம் உணர்த்துவதும் , அவர் வேறுபட்டதாக உணர்வதும்.

27 தனது இயல்பிற்கு மாறுபட்டு தனக்கென ஒரு வடிவத்தை சமைத்துக் கொள்ளுதல் , அதுவே தான் என மாற முயல்வது .துருபதனை குரு மறுதலிக்க , சூழ்ச்சி மிக்கவனான துருபதன் துரோணரை சரண்டைதல்.

28  அவனை தன் மாணவனாக அடைதல் .குருவின் வழிகாட்டாலான மொழியை ஒதுக்கி தனக்கான பிறவிக் கணத்தை அடைதல்.அகந்தையாலோ ஆசையாலோ அச்சத்தாலோ எடுக்கும் முடிவுகள் தீங்கையே கொண்டுவரும் என்பதை உணர்ந்துகொள். துரோணன் அவர் விழிகளை சந்திக்காமல் தலைகுனிந்து மெல்லிய குரலில் நான் அவனை என் மாணவனாக எண்ணுகிறேன் குருநாதரே” என்றான். அக்னிவேசர் சிலகணங்கள் அவன் முகத்தை நோக்கிவிட்டு அவ்வாறே ஆகுக! என்றார்..பலவித நிராகரிப்பு என்கிற ஒற்றை அனுபவம் இருவரையும் இணைக்கிறது

அவன் அருகே வந்தபோது அது என்ன என்று அவர் அறிந்தார். அவனிடம் எப்போதுமே இருக்கும் சூழ்ச்சி தெரியும் உடலசைவு அது. முதன்மையான எதையோ சொல்லவந்து தயங்குபவன் போன்ற பாவனை. அது தன் கோழைத்தனத்தை மறைக்கவிரும்பும் கோழையின் அசைவு. முதல்முறையாக அவனைப்பார்த்த நாளில் அவன் ஓடிவந்து தன் காலில் விழுந்து எழுந்தபோதே தன் அகம் அதை கண்டுகொண்டிருந்தது என அப்போது அறிந்தார். ஒவ்வொருமுறையும் அதை தள்ளி அகற்றியபின்னர்தான் அவனுடன் அவர் நெருங்கினார். அப்போது அது மட்டுமாகவே அவன் தெரிந்தான்.

துரோணர் தனது ஆணவத்தால் நெறிமீற அதை தன் உள்ளுணர்வு மூலம் அறியும் துருபதன் அவரை பயன்படுத்திக்கொள்ளகிறான் துரோணரின் ஊழின் விதை இங்கு விதைக்கபடுகிறது.

29 தனக்கான முழு நிலவு என அறிந்திருக்கிறார் அக்னிவேசரன் மறைவு துரோணரின் ஊழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.குருவின் அறிவுறையை தனது தந்தைமீதான வெறுப்பால் மறுக்கிறார் .குரு அவருகான மாற்று வழியை கண்பித்து அவரை ஊழில் இருத்துகிறார் துரோணரின் பிறப்பு இருப்பு விருப்பும் அது ஈடேறாமை குறித்து பேசுகிறது.ஒரு பறவை வந்தமர்வது போல பரசுராமன் இருப்பிடம் அறிகிறார் . அதை கண்னெதிரில் இழந்து வெகுண்டு மாற்று வழி தேடி சரத்வானை தேடி செல்கிறார் .

30 துரோணர் சரத்வான் ஆசிரமத்தை அடைதல் , கிருபியை மணம்முடித்தல்.
சற்று நேரம் மூவரும் ஒரே மௌனத்தின் மூன்றுமுனைகளில் திகைத்து நின்றிருந்தார்கள்.


31 கிருபியுடன் மலையிறங்குதல் , குருகுலம் அமைத்தல் .அஸ்வத்தாமன் பிறப்பு .அவனது பிறவி நூல் கணிப்பு , அஸ்வத்தான் யானையின் பிறப்பு .

கங்கையின் பெருக்கை நோக்கியபடி ஒழுகி வந்தபோது கரையோரமாக விலகிச்சென்ற ஒவ்வொரு ஊரிலும் அவன் சற்றுநேரம் வாழ்ந்து வாழ்ந்து மீண்டான்.

காட்டில் வாழ்வதற்கு ஞானமோ வாலோ இருந்தாகவேண்டுமே”

முற்றிலும் நான் அறியாதவற்றால் ஆனவளாக இருக்கிறாய். அவள் சிரித்துக்கொண்டு ஆமாம், ஆகவேதான் நான் பெண்” என்றாள். நான் யார் உனக்கு? நீ அறியாதவற்றால் ஆனவனா?” என்றான். அவள் இல்லை” என்றபோது அவன் சிறிய ஏமாற்றத்துடன் விலகிக்கொண்டான். அவள் அவன் தோளைத் தழுவியபடி நான் ஆகமுடியாதவற்றால் ஆனவர்” என்றாள்.


32 அஸ்வத்தாமனைப் பற்றிய இளமைக்கால குறிப்புகள்.துரோணரின் ஏழ்மையும் மனைவியின் வசைச் சொல்லும் .

33.துழோரணர் துருபதனை சந்திக்க செல்லுதல் 

34 துரோணர் துருபதனால் அவமானமுறுதல்


35 துரோணர் குசையை சந்தித்தல், வடவத்தீயை பெற்றுக் கொள்ளுதல்

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்