ஶ்ரீ:
பதிவு : 610 / தேதி 29 மார்ச் 2019
“இங்குள்ள அனைத்தும் வெறுமையல்ல . நாம் பொருளை அறியவில்லை என்பதனால், அறிய முடிவதில்லை என்பதனால், பொருள் இல்லை என்றவதில்லை” என்றார் அவர், “பொருள் உள்ளது . அதை அறிய வேண்டுமென்றால் நான் என்ற நிலையில் இருந்து அதை அணுகக்கூடாது .சார்த்ர் தேடியது எனக்கான பொருள் என்ன என்ற கேள்விக்கான பதில் . இதற்க்கெல்லாம் பொருள் என்ன என்று தேடினால் கண்டுகொள்ளலாம்” என்று அவர் சொன்னார் .
ஜெயமோகனின் முகங்களின் தேசம் கட்டுரை தொகுப்பில் எனக்குள் நான் விவாதிக்கும் கருவிற்கான பதிலாக இன்று வாசிப்பில் எனக்கு முன் எழுந்து ஆகப் பெரும் பதில்களுக்கு துணைப்பவைகளாக நின்றிருக்கிறது..
தேடல் மிகுந்த வாழ்க்கையில் இருந்து கண்டடைபவைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் மனப்பான்மை , எப்போதும் நெகிழ்வானதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதியாக இருந்தாலும் , அது கட்டற்று பெருகிப் பாயும் போது கைக்கொண்டவற்றையும் மோதி சிதைத்து விடுவதுண்டு . அதே சமய, கற்றவற்றை உடைத்துக்கொள்ளாது புதியவற்றை உள்வாங்குவது நிகழ்வதில்லை என்கிற இரண்டு நிலைகளுக்கு இடையில் தேடலில் இருந்து கிடைக்கும் புரிதல் என்கிற நதி பாய்கிறது , அது எத்தையும் கரைத்து ஆழ் படிமத்தை மட்டும் விட்டுச் செல்கிறது .
இதில் ஒருவர் இருக்க வேண்டிய நிலை பற்றி முடிவாக சொல்லக் கூடியது என ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை . பெருந்திட்ட வாதத்தில் நம்பிக்கை கொண்டவன் என்கிற அடிப்படையில் . இருப்பின் பொருளை புறிந்துகொள்ள முயற்சிப்பது எனக்கானது என் எப்போது நினைக்கிறேன் .
தந்தை வழியாக எனக்கு கிடைத்த கொடை என நான் நினைக்கும் மெய்மையை இன்றைய நவீன உலகில் வைத்து புரிந்து கொள்வதை எனக்கான மெய்மை தேடல் என நினைக்கிறேன் . அதில் கிடைக்கும் இன்பத்தை ,புரிதலை நான் எப்போது இழக்க விரும்புவதில்லை.
மெய்மை என்பது பெருபாலும் ஆச்சாரம் சம்மந்தப்பட்டவைகளாக இருந்து விடுபவை . மெய்மையை அதில் வைத்து குழப்பிக் கொள்வதை விடுத்து பிற அகத் தேடலில் ஈடுபடுவதே எனக்கானதாக நான் நினைத்து வந்திருக்கிறேன் . ஆச்சாரங்கள் பாத்திரத்தை சுத்தி செய்வது , ஆகையால் அது காலத்தால் மாற்றமடையாக் கூடியவை .எவை எந்த அளவிற்கு. என்பதற்கான பதிலை இன்று யாரும் யாருக்கும் சொல்லும் இடத்தில்லை .
அவற்றை நோக்கி நாம் கேள்விகளை எழுப்பிக் கொள்ளாது போனாலும் நம் சம்பந்தபட்ட யாராவது என்றாவது அவற்றை ஒரு சந்தர்ப்பத்தில் எழுப்புகிற போது , அவற்றிற்கான பதில் நடைமுறை சார்ந்திருக்க சந்திக்க வேண்டி வருகிற போது அந்த திடுக்கிடல் உணரப்படும் .