https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 14 மார்ச், 2019

அடையாளமாதல் - 436 * காந்திய அணுகுமுறை *

ஶ்ரீ:





பதிவு : 436 / 608 / தேதி 14 மார்ச்  2019

காந்திய அணுகுமுறை  


எழுச்சியின் விலை ” - 37
முரண்களின் தொகை -03 .



புதுவை கம்யூனிஸ்டின் பெரும் தலைவர் .சுப்பையாவிற்கு ரஷ்ய தலைவர்களுடன் நேரடித் தொடர்பிருந்தது  . காந்தியை புதுவைக்கு முதலில் அழைத்தது அவர்தான் என்றாலும் , பின்னர் காந்தியின் அரசியல் நிலைபாட்டால் , மாற்று இயக்கம் நோக்கி நகர்ந்தார்., தேசியவாதியாக தன் அரசியலை துவக்கிய சுப்பையா எதிர்கொண்ட சிக்கல்கள் புதுவை மாநிலத்திற்கென பிரத்யேகமானவை , சிறிய பகுதியாக இருந்ததனாலும் , மிகப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட பிரிட்டீஷாரை , அதை நிர்வகிக்க பல விதமான புரிதில்களை உருவாக்கிக்கொண்டதை போன்ற ஒன்று இவர்களிடம் இல்லை .

தகவல்களை ஆவணப்படுத்துதல் பிரிட்டீஷாரின் வழமையாக இருந்தது . இந்திய கலாச்சார ,பண்பாடு , மொழி ,ஜாதி குறித்து  அவர்களுக்கு பிரத்யேக பார்வை இருந்தது.அதைக் கொண்டு நிலவுடைமை சமுதாயத்தையும் , பிற சமூகத்தையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் புள்ளிகளை அறிந்திருந்தார்கள். அதைபயன்படுத்தியே அனைத்துத் தரப்பிற்குமான சமரச புள்ளியை உருவாக்கி இருந்தார்கள் . அது அனைத்தையும் சம தூரத்தில் வைத்திருக்க உதவியது. அதிலிருந்து அடையும் , அல்லது புரிந்து கொள்படுபவைகள் ஆவணப்படுத்தினார்கள் , அது அவர்களின் நிர்வாகத்திற்கு பலம் சேர்த்தது.

காந்தி போன்ற தலைவர்களுக்கு புதிய அனுகுமுறைகள் தேவைபட்டதற்கு , பிரிட்டீஷாரின் அந்த புரிதல்களே தடையாக இருந்தன . தொடர்ந்து அவர்களுடன் காந்தி தனது உரையாடல்களின் வழியாக அவர்களின் புரிதல்களில் உள்ள இடைவெளிகளை கண்டடைந்து தனது யுக்தியை உருவாக்கிக் கொண்டார் . காந்தி நிராகரிக்க முடியாத மனிதராக இருந்தார் . அதற்கு அவரது அரசியல் அனுகுமுறைகள் பெரிதும் உதவின.

பிரிட்டீஷாரை போன்ற தகவல் தொடர்புறுத்தல் வழிமுறைகளோ , புரிதல்களோ பிரஞ்சு நிர்வாகத்திற்கு  இல்லை .இந்திய மண்ணின் சிக்கல்கள் சிடுக்களினால் ஆனவை . அவற்றை அடிப்படையிலிருந்து புரிந்து கொள்வது நீண்ட அனுபவத்தை கோருவது .பிரன்ச் அரசாங்கம் அமர வைத்திருக்கிற கவர்னர்களை கண்கானிக்க உள்ளூர் பிரமுகர்களில் இருந்து சிலரை நியமித்துக் கொண்டது . இந்த இரண்டடுக்கு அனுகுமுறை , இரு தரப்பையும் இரண்டு விசைகளில் நிறுத்தி வைத்து , ஒரு சமன்பாட்டை உருவாக்கி வைத்தது.

இதிலிருந்து வெளியேற கவர்னர்களாக வருபவர்கள்  உள்ளூர் பிரமுகர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர் அதனால் மூச்சு திணறும் அளவிற்கு உள்ளூர் பிரமுகர்கள் தனியாட்டசி நடத்தினர். அவர்கள்  விடுதலை போராட்டத்தின் குரல் வளையல் அமர்ந்திருந்தனர். இந்திய ஒன்றியத்தின் நீதிமன்ற வழிமுறைகளின் நோக்கம் பிறிதொன்றாக இருந்தாலும் , மக்களிடையே நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது . ஆனால் பிரன்ச் அரசாங்கத்திற்கு முக்கியமான சிக்கல்களில் ஊர் பெரிய மனிதர்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்ததால் , அவர்களே மக்களை ஆளுபவர்களாக  உருவெடுத்தெனர்

பிரன்ச் இந்திய பகுதியின் சுதந்திரப் போர் என்பது ஒரு கோணத்தில்  இவர்களுக்கு எதிரானதுதான். அதனால் போராட்ட முறைகள் புதுவையில் மாறுபட்டிருந்தது . காந்தி சொன்ன போராட்ட முறைகள், தங்களின்  நுண்ணிய சிக்கல்களுக்கு தீர்வை தராது என்கிற எண்ணம் சுப்பையா போன்றவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் , அதுவே அவர் காந்திய வழிகளில் இருந்து விலகிச் செல்ல காரணமாக இருந்திருக்கலாம்  .அதன்பின் புதுவையில் அரசியல் கொலைகள் புதுவையை புரட்டியது .

பிரிட்ஷ் அரசாங்கம் இந்திய நிலத்திலிருந்து வெளியேறிய பிறகும் , பிரன்ச் அரசாங்கம் இந்திய மண்ணில் நீடித்தது .சுதந்திர நாடான பிறகு இந்திய பிரதமருக்கு சர்வதேச நெருக்கடிகள் தொடங்கின .புதுவை மக்கள் பிரன்ச் அரசாங்கத்திற்கு எதிராக எழாதவரை மற்ற பிரதேசங்களை தனது ஆளுகைக்கு உட்படவைத்த வழிமுறைகள் புதுவைக்கு பொருந்தி வரவில்லை , காரணம் புதுவையில் மக்களெழிச்சி ஏற்படாதே.

புதுவை இந்திய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என்கிற தீர்மானம் கூட புதுவைக்கு வெளியே கீழூரில் தான் நிறைவேற்றப்பட்டது.இது சுதந்திர போராட்டமே கூட சில குறுங்குழுவினதாது போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது . என்ன காரணத்தினால் அந்த முதல் கூட்டம் புதுவையின் மத்திய பகுதியில் நிகழாது போனது . அது நீண்ட வரலாற்று சிடுக்குகள் புதுவையை நாட்டின் மைய ஓட்டத்திலிருந்து விலகியிருந்தது .

காந்திய வழி போராட்ட வழிமுறைகள் அதை செயல்படுத்தும் முணைகளில் உள்ள யதார்த்தம் , நடைமுறை படுத்துகையில் நிகழும் மாற்றத்தை கொண்டு அவை மீளவும் மாற்றி வடிவமைக்கக் கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டதாக எப்போதும்  இருந்தது . ஆகவே அது நீண்ட காத்திருப்பை அடிப்படையாகக் கொண்டது .கம்யூனிஸ்ட் தலைவர்  சுப்பையா பிற தீவிர எண்ணம் கொண்டவர்களை போலவே, நீண்ட கால காத்திருப்பிற்கு தயாரில்லாத மனநிலை இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்