நூறிதழ் நகர்.
வெண்முரசின் நேர் பொருள் அல்லது நாடகீய தருணங்களை தாண்டி உள்ளுரை பொருளாக வேறு ஒரு தளத்தில் வைக்கப்படுகிற போது அது தன்னை நவீன உலகத்தில் தொடர்புறுத்துகிறது மொத்த வெண்முரசும் , பல அணிகள் . விடுபடல் ஒரு அணி என்றால் அதன் text வழியாக சென்று சேரும் Subtext உளவியல் பிறிதொரு அணி அல்லது திருப்பு முனை தருணங்கள் என எதையும் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்தாளலாம் காரணம் அதன் அடர்த்தி .
இந்தப் பகுதி கதை மாந்தர்கள் தங்களை எந்த வித ஆளுமையாக முன்வைக்கிறார்கள் அவர்களுடன் தங்கள் அனுபவத்தின் வழியாக தங்களை தொடர்புறுத்தி அடையாளம் காண முடியுமானால் அதிலிருந்து இன்றளவும் தங்களின் இடமாக அல்லது எதன் குறியீடாக பார்க்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.
துரியோதனன், ருக்மி, சிசுபாலன் போன்றவர்கள் அரச குடும்ப ரத்த சம்பந்தம் கடந்து வேறு என்ன வகையில் இவர்கள் எதன் மையப் பாத்திரமாக வருகிறார்கள் ? ஏன்? இந்தப் பகுதியில் துரியோதனன் போர் என மூளுமானால் அதில் தனது அணிகளை தேர்வு செய்யும் பகுதியாக இதை பார்க்கலாம் அவனுக்கு பீமனுக்கும் மற்றும் அர்ஜுணனுக்கும் நேர் எதிர் நிற்பவர்கள் தேவையாகிறார்கள் கர்ணனினை அர்ஜூன்னுக்கு எதிராக வைக்கும் போது ஜராசந்தனை பீமனுக்கு எதிர் வைக்கும் வாய்ப்பை கண்டடைகிறான் போன்றவை மிக நுண்ணிய அரசியல் செயல்பாடுகள்
தலைமை பண்பு - ஆளுமை பல வித திறமைகளை கொண்டது தெய்வம் தனி ஒருவனுக்கு அத்தனை ஆற்றலையும் அளிப்பதில்லை நால்ல தலைமையை கொடுக்க நினைப்பவன் அந்த தனியாளுமைகளை கண்டடைந்து தன்னுடன் இணைத்துக் கொள்வதன் வழியாக தனது வெற்றிடத்தை நிறைக்கிறான். அவ்வகையில் துரியோதனன் பிறர் கண்களுக்கு எளிமையானவனாக முன்வைப்தில் வெற்றி அடைகிறான்.
த்ரௌபதி , கண்ணன் பாத்திரம் அவர்கள் சிந்தனைகளை பிறர் சொல் மூலம் வைக்கபடுவதைப் போல துரியோதனனை எளிய மனிதனாக ஏமாளியாக காட்ட முனைந்து ஒவ்வொரு முறையும் அவற்றை அவன் கடந்து செல்பவை தற்செயல் என முன் வைக்கப்பட்டாலும் அப்படி இது நிகழ்வதில்லை.
கர்ணன் நடைபெற இயலாத ஒன்றை நடத்துபவனாக அதனால் அலையுறுபவனாக காட்டப்படுகிறான். தனக்கான இடத்தை தனது முதிய யுக்திகளை அல்லது சந்தர்பங்களை உருவாக்கி அல்லது உருவாகி வருவதை பயன்படுத்த நினைக்கிறான். அது அவன் துரியோதனன் இடத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் தன்னை நிலைநிறுத்த முயல்பவனாக காண்கிறேன். இது அரசியலில் இரண்டாம் கட்ட தலைவர்களின் ஊழ். அந்த கதாபாத்திரங்கள் வழியாக உருவாகும் subtext மிக ஆழமானவை மொத்த வெண்முரசும் மகாபாரதம் சொல்லும் மனிதர்களின் ஒளி நிழல் என இரண்டு பகுப்புகளின் வழியாக நடைமுறை நவீன உலகில் பிரவேசிக்கும் அதே சூழலில் மகாபாரத காலத்தில் கருப்பு வெள்ளையாக வைக்கப்பட்ட அதிமாநுடர்களை இந்த subtext வழியாக நவீன உலகிற்கு அறிமுகம் செய்கிறது.
கர்ணன் விதர்பத்தின் ருக்மி மற்றும் சிசுபாலனை தன்னை போல கண்ணனுக்கும் அர்ஜுனுனுக்கும் நட்பை நீட்டும் இடம் அவனை ஒரு அரசியல் கோமாளியாக காட்டினாலும் அதனுள் உள்ள subtext வேறு ஒரு பரிமாணத்தை அளிக்கிறது. அனைவருக்குள்ளும் பாண்டவர்களுக்கு எதிரான ஒரு புள்ளியை உருவாக்குகிறான் அல்லது உருவாகிறது. இந்த தருணம் தார்தராஷ்டிரர்களை ஒரே பார்வையில் வைக்கிறது பிற சகோதரர்களிடமிருந்து துரியோதனை கூர் கொண்டவனாக வைக்கிறது . துரியோதனன் சொல் செயல் வெவ்வேறாக பலமுறை நிகழ்ந்து இப்போதும் அப்படியே . சொல் அளவில் கர்ணனை வைக்கும் துரியோதனன் அவனுக்காக எங்கும் காத்திருந்ததில்லை. தேவயானி மணிமுடி கர்ணன் கொடுக்க வேண்டும் என்கிற துரியோதனின் சொல் அவையில் நிகழவில்லை.
இந்த பின்புலத்தில் நூறிதழ் நகர் என தாமரையை சொல்கிறது என்பதை தாண்டி அது பல உள்ளடுக்குகளை சென்று தொட இயலுமா .
1. தாமரை – நகரின் உருவகம்
- தாமரை = சுத்தம், புனிதம், ஆன்மிக விகாசம்.அரசியல் வளம், ஆன்மிக உயர்வு ஆகியவற்றின் குறியீடாக வருகிறது
- த்ரௌபதி – தாமரையின் கரு (கருவளையம்) தாமரையின் இதழ்கள் எத்தனை விரிந்தாலும், அதன் மையக் கரு தான் உயிரின் பிணைப்பு. “நூறிதழ் நகர்” என்றால், த்ரௌபதி அதற்கான “பரம கரு”.
3. பாண்டவர்கள் – இதழ்கள்
அதுவரை நகர் பற்றிய செய்தியாக இருந்தது இங்கு தனிப்பட்ட ஆளுமைகளை உடன் கொண்டுள்ள ஒரு பரிமாணத்தை காட்டுகிறது
- பாண்டவர்கள் — யுதிஷ்டிரன் (தர்மம்), பீமன் (வீரம்), அர்ஜுனன் (திறமை), நகுலன் (அழகு), சகதேவன் (ஞானம்).
போன்று அந்த தாமரை இதழ்களாக பல்வேறு குணங்களுடன் இணைந்தவர்களாக காட்ட முடிகிறது.
துரியோதனன் ,கர்ணன்,ஜராசந்தன், சிசுபாலன்,ருக்மி. இவர்கள் எந்த வகை ஆளுமைகளாக வைக்கப்படுகிறார்கள்.
நிலம் பற்றிய பிறிதொரு கோணம்
வஞ்சம் ,இருள் ,நிழல், கரவு போன்றவை நீர் என எங்கும் நிறைந்துள்ள வண்டல் அழுக்கு சேறு மண்டிய இடத்தில் நூறிதழ்களை கொண்ட நகரம் ஒளியே உருவாகி நிற்கிறது.
நூறிதழ் நகர் என்கிற தாமரை தண்ணீரில் மலர்ந்தாலும் அதுனுடன் ஒட்டுவதில்லை. என்றாலும் அதன் அழிவை அதனுள் விதைகளே தீர்மானிக்கின்றன.
மேலே ஒளி எழுந்த நகர் இருக்க கர்ணன் அதன் சேற்றில் இறங்கி அதன் பிறதொரு உலகை கண்டடைகிறான்.
ஜராசந்தன் இருவரும் அயலவர்கள் அவர் உள் நுழைவால் உருவாகும் ஊழ் பற்றி பேசுகிறது
இங்கு கௌரவர்கள் தரப்பு அல்லது பாண்டவர்களின் எதிர் தரப்பு என எடுத்துக் கொண்டால் இப்பகுதியில்
துரியோதனன்
கர்ணன்
ஜராசந்தன்
சிசுபாலன்
ருக்மி
4. மாயமாளிகை – மாயை மற்றும் மெய்
- மாயமாளிகை – மாயைபோல் தோன்றினாலும் பாண்டவர்களின் மெய்யான அரசாட்சிக்கான தளம்.
- நகரம் வெளியில் கற்பனை (மாயம்) போலத் தெரிந்தாலும், அதன் அரசியல் அர்த்தம் நிஜம்.
5. வளமும் நிழலும்
- தாமரை காலை மலர்கிறது, மாலையில் சுருங்குகிறது → நிலையற்ற அழகு.
- இதுபோல், “நூறிதழ் நகர்” இப்போது பாண்டவர்களின் வளத்தின் உச்சம், ஆனால் பின்னர் சிதைவுக்கான விதையும் அதிலேயே அடங்கியுள்ளது.
- வளமும் மாயமும் இரண்டின் நிழல் = வரவிருக்கும் சோதனையின் முன்னோட்டம்.
- மாயமாளிகை = மாயை–மெய் இரண்டின் சங்கமம்.
- மலர்ச்சி–சுருக்கு = வளமும் நிலையின்மையும்.
த்ரௌபதியின் மைய நிலை, வளத்தின் உச்சம், வரவிருக்கும் சிதைவு ஆகிய அனைத்தையும் சின்னமாகக் கொண்ட ஆழமான உருவகம்.
நாகர் மற்றும் ஜராசந்தனின் வஞ்சம் வெளிப்படை தன்மை கொண்டதாக கர்ணனின் வஞ்சம் அவனுக்கு எடுத்துரைத்த போதும் அவன் அதை ஏற்க மறுக்கிறான்.
இதை பிளவு பட்ட மூன்றை மையமாக கொண்ட பகுதியாக எடுக்கலாம் .
- பிளவு பட்ட நாக்கு
- பிளவுபட்ட உடல்
- பிளவு பட்ட சிந்தனை அல்லது நிலைபாட்டை உடையவனாக கர்ணன் காட்டப்படுகிறான் என எடுத்துக் கொண்டால் இந்த அத்தியாயம் முழுவதும் ஒளி பற்றி பேசிக் கொண்டே சென்றாலும் அதனடியில் உள்ள இருள் பகுதிகளை கர்ணன் மட்டும் காண்கிறான்
கர்ணன் ஜராசந்தன், என இருவர் உள்நுழையும் நாகமாக சித்தரிக்கப்பட்ட குறியீடு.
பிளவு பட்டு பிறந்து ஜரா எனும் யட்சினி இணைத்து உருவாக்கியவன். வாழ்வின் இரண்டு நிலைகளை மிக அனாயாசமாக சென்று வரக்கூடிய அதே சமயம் மிக மிக நுட்பமான தீமை அதன் அடியில் நிரந்தரமாக உள்ளது.
“விதுரர் சினம் கொள்வதும் அடக்குவதும் தெரிந்தது. “அங்கரே, பலநூறு துலாத்தட்டுகளால் நிகர்செய்யப்படும் ஒரு மையம்தான் அரசியல். நிகர்நிலையழிவது என்பது போராயினும் அமைதியாயினும் வேறெங்கோ நிகர்மாற்றமொன்றை நிகழ்த்தும். அது நன்றென இருக்கவேண்டியதில்லை”என்றார் விதுரர்”
கர்ணன் வருகை
- கர்ணன் என்பவன் பாண்டவர் உலகத்தில் “அன்னியன்” (outsider). அவன் அடையாளம் மறைக்கப்பட்டவன்; தன் பிறப்புரிமை பறிக்கப்பட்டவன்.
- அவன் வருகை வெளிப்புற அழுத்தமும், இன்னும் வெளிப்படுத்தப்படாத ரகசியமும் பாண்டவரின் வாழ்வை சூழ்ந்திருப்பதை குறிக்கிறது.
- அவன் சக்கரத்தையும் தானத்தையும் குறிக்கிறான்: தானம், வீரியம், ஆனால் தன்னிலை மறுப்பு.
- இங்கு அவன் வருகை “அனியமானது உட்புறத்தில் நுழைகிறது” என்ற குறியீடு. பாண்டவரின் எதிர்கால வாழ்வில் (திரௌபதியின் வருகையோடு) அவன் நிழலாய் பிணைக்கப்பட்டிருப்பதைத் தூண்டுகிறது.
2. நாகர் வருகை
- நாகர்கள் பெரும்பாலும் பெரிய நிலைமாற்றம் (மரபின் இடையூறு, புதிய சக்தி, உள்அடிநிலை) எனக் குறிக்கப்படுகிறார்கள்.
- நாகம் = பாம்பு = அடிநிலையின் சக்தி, மறைந்த புலன்.
- “வெய்யோன்” முழுவதும் பாண்டவர்களின் வாழ்வை ஆளும் மூல சக்தி, மறைவான ஆசை, ஆழ்மன உந்துதல் என்பதையே நாகர் வருகை சுட்டுகிறது.
- பாண்டவர்கள் ஆளும் வெளி உலகத்துக்கு அடியில், நாகர்களின் ஆழ் உலகம் பிணைந்து கிடக்கிறது என்பதை குறிக்கிறது.
3. இருவரும் சேர்ந்து வருவதன் குறியீடு
- கர்ணன் = விதி மறுத்த வீரன் (மனித அடையாளப் பிரச்சினை).
- நாகர் = மறைவான சக்தி (பூமி அடிநிலை).
- இவர்கள் ஒரே இடத்தில் தோன்றுவது பாண்டவர்களின் உலகில் மறைவும் வெளிப்பாடும் ஒன்றுசேரும் முன்சுட்டு.
- வெளிப்படையான அரசியல் எதிரி (கர்ணன்) + உள்நிலையிலிருந்து வரும் சக்தி (நாகர்) ஆகியவை பாண்டவரின் பாதையை நிர்ணயிக்கப் போவதை அறிகுறியாகக் காட்டுகிறது.







