https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 26 ஏப்ரல், 2025

வெண்முரசு கூடுகை. 81 எனது உரையின் எழுத்து வடிவம்

 வெண்முரசு கூடுகை. 81






35 முதல் 40 வரை.

இந்தப் பகுதிகள் இந்திரபிரஸ்தம் மற்றும் அஸ்தினாபுரயின் பிரிவினைக்கு பிறகு நடைபெறுகிறது என புரிந்து கொண்டால், மதுவின் மயக்கத்தில் கர்ணன் பிறப்பு ரகசியத்தை ஜெயத்ரதனிடம் வெளியிட முயல்கிறான் என்பதை அங்கிருந்து புரிந்து கொள்ள முயல்கிறேன். கர்ணனின் தலைமையில் அனைத்தும் ஒன்றென இருக்கும் வாய்ப்பை பற்றி சிந்திக்கிறான் என எடுக்கலாம்.


  1. 1.தார்த்தராஷ்டிரன் உளநிலையால் அடையும் நிறைவின்மை. அனைவரை பற்றியும் தனது விமர்சனைத்தை எள்ளலாக வைக்கிறார். அதன் வழியாக அவர் கடந்து செல்ல முயலும் இடம்.
  2. 2.ஜெயத்ரதன் போலி கர்வம் , பாராமுகம் பின்னர் கர்ணனிடம் பணிதல் என மிக எளிய மனிதனாக வெளிப்படுகிறான்
  3. 3.இந்தப் பகுதி வெண்முரசின் முக்கிய விதைகளாக விழும் இடங்கள்,கதை, களம்,தத்துவ கோட்பாடு என விரிகிறது


கூற்றெனும் கேள் பகுதி இரண்டாக இதை எடுத்தால் இதில் கூற்றெனும் கேள் என்பது மரணம் ஒரு நிச்சயமான செயல்பாடாக மட்டுமல்ல, அது ஒரு உணர்வாகவும், ஒரு கேள்வியாகவும், ஒரு புரிதலாகவும் இருப்பதை உணர்த்துகிறது.

இதுவெய்யோன்நாவலில், யுத்தம், வீரம், மரணம், அல்லது ஒரு தவிர்க்க முடியாத விதியின் வெளிப்பாடு போன்ற தளங்களில் விரிகிறது.


நாவலில் பேசுபவர்கள் இதை எந்தக் கட்டத்தில் சொல்கிறார்கள், யார் யாருக்கு சொல்கிறார் என்பதற்கு ஏற்ப இது ஒரு சாபம், ஒரு எதிர்வினை, அல்லது ஒரு மரணத்திற்கான அழைப்பு என்பதாக மேலும் விரிவடைகிறது . இது முக்கியமான தருணங்களில் வரும் மொழிப்பண்பாகவும் இருக்கலாம்.


கர்ணனின் தனது மரணத்திற்கான தருணத்தை தத்துவ ரீதியாக அமைத்துக் கொள்ளும் பகுதி.

மரணம் என்பது ஒரு நிகழ்வாக மட்டுமல்ல, ஒரு பிரபஞ்ச விதியாகவும் அதன் செயல் விளைவுகளாகவும் விரிகிறது.


கூற்றெனும் கேள்பகுதி வெய்யோன் நாவலில் கர்ணனின் பார்வையிலிருந்து ஜயத்ரதன் குறித்தும். தந்தையால் கைவிடப்படும் குழந்தை அவரின் கவனத்தை கவர செய்யும் காரியங்கள் அவர்களை குறையுள்ளவர்களாக ஆக்குகிறது. அந்த குணமே பின்னாளில் யுத்தத்தின் அவனது பிறப்பின் தத்துவத்தையும், மரணத்தின் நிச்சயத்தையும் அலசுகிறது.



கூற்றெனும் கேள்பகுதியில் முக்கியமாக அபிமன்யுவின் மரணம் இங்கு நுண் வடிவ விதையாக விழுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் முக்கியமானவர்கள் அனைவரும் இங்கு வருகிறார்கள் துரியன் மகன் லட்சுமணன் கையால் அபிமன்யு மரணமடைகிறான் என வியாச பாரதம் சொல்கிறது அதன் உச்சம். ஆனால் வெண்முரசில் அது காட்டப்படவில்லை


அபிமன்யுவின் கொலை போரின் போக்கை மாற்றுகிறது. இளவரசர்கள் அனைவரும் கொல்லப்படும் யுத்த நியாயத்தை மாற்றி உருவாக்கிக் கொள்ள வைக்கிறது.  


மகாபாரதத்திலும் வெண்முரசிலும் அபிமன்யுவின் கொலையில் கர்ணனின் பங்கு முக்கியமானது, ஆனால் இரண்டிலும் அது வெவ்வேறு கோணங்களில் விவரிக்கப்படுகிறது.

மகாபாரதத்தில் அபிமன்யுவின் கொலை தனியனாக கோரமான சக்கர வியூகத்திற்குள் நுழைகிறார், ஆனால் பாண்டவர்கள் அவரை பின்தொடர முடியாமல் விடப்படுகிறார்கள்.

அந்தச் சூழலில், துரியன் தரப்பில் இருந்த ஆறு பேர் சேர்ந்து அபிமன்யுவை கொல்லுகின்றனர்:

1. த்ரோணர்யுத்தக் கோட்பாட்டை அமைத்தவர்

2. அசுவத்தாமா

3. கிருபாச்சாரியர்

4. கிருதவர்மன்

5. துரியோதனன்

6. கர்ணன்

அபிமன்யுவிடம் அவனது முழுமையான போர்ப் பயிற்சி இல்லை என்பதால், வியூகம் உடைப்பதற்கான நுழைவு முறையை மட்டுமே தெரிந்திருந்தார்; அதிலிருந்து வெளியே வருவது தெரியவில்லை என்பதுமாக அர்ஜுனை நிலைகுலைய செய்ய இதை பயன்படுத்திய கௌரவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை தாக்குகின்றனர்.

கர்ணன் நேரடியாக அபிமன்யுவைக் கொல்லவில்லை, ஆனால் அவனது பலத்தை உடைத்துத் அதன் இயல்பான போர்ப் பலத்தை குறைத்தார். இதனால், அபிமன்யு அஸ்திர, சஸ்திரங்கள் இல்லாமல் நிராயுதபாணியாகி போகிறார். பின்னர், மற்ற வீரர்கள் சேர்ந்து அவரை கொல்கிறார்கள்.


———————————————————-


தனக்கான வதையை தானே உருவாககிக் கொள்ளும் இருவர். 1. தார்த்தராஷ்டிரன். 2. தீர்க்தமஸ்.3. ஜெயத்ரதனின் தந்தை மற்றும் கர்ணன்


அவற்றை தார்த்தராஷ்ரனுடனான இணைப்பாக வைக்கும் போது . அஸ்தினாபுரியும் அதன் வளம் ,பெருக்கம்,நிறை என சொல்லி வந்து பிறர் எதிர்கால அச்சமின்றி நிறைவாக திகழ்ந்து கொண்டிருக்க அதனால் உருவகும் இன்னதென அறிய முடியாத யதார்த்தத்தின் துவக்கம் குறித்து அச்சம் அடைகிறார் அதனால் உருவாகும் நிறைவின்மையும் அலைக்கழிப்பும் நிலைகுலவும் அவரது ஞானமாக இதில் வைக்கப்படுகிறது.


அவரது அறிதலுக்கு பின்னால் தீர்க்கதமஸின் நிழல் உரு அவருக்கு அருகே இருந்து கொண்டிருக்கிறது. அதை தார்த்தராஷ்டிரனும் அறிகிறார் . காலத்தின் வசத்தால் அவர் தனது அனுபவ படிபங்களை தார்ததராஷ்டிரருக்கு எதிர் காலப் புரிதலாக அளிக்கிறார்.


தார்த்தராஷ்டரின் ஞானம் தீர்க்கதமஸுடையாதாக பொருள் கொள்ள தக்கது. அவர் இதில் நிலை கொண்டுள்ள தார்தராஷ்டிரன்,ஜெயத்ரதனின் தந்தை மற்றும் கர்ணனின் குல பிராஜாபதி என்கிற இடத்தில் நின்று பிள்ளைகளின் எதிர் சாபத்தால் அவர் தார்த்தராஷ்ரனிடம் இருந்து தனக்கான ஊழை ஒரு பார்வையாளாராக நிறுத்திக் கொண்டாலும் அவர் இன்னும் தன்னை பார்வை அற்றவனாக முன் வைத்து இந்த உலகு தனக்கானது இல்லை என்கிறார்


இங்கு சொர்கத்தால் அவருக்கு ஆவது என்ன என்கிற கேள்வியை எழுப்புகிறது. எந்த இடத்திலும் தீச்சொல் தவடர்ந்து இது முரணாக தோன்றலாம் ஆனால் தொடரந்து வருகிறது என்றே பொருள் கொள்ள தோன்றுகிறது


ஒரு வகை பார்வையற்று உலகியலில் இருந்து விலகு நிற்பது. அதன் தன்மை அறியாது தனது புரிதலால் தார்த்தராஷ்டிரன் தன் துன்பங்களை பல மடங்காக பெருக்கி அனுபவிக்கிறார்


இருவருக்குமான பொதுமைகள் அவர்களை ஊழின் வசத்தால் தொடர்புறுத்துகிறது 


இருவரும் பார்வை இல்லாதவர்களின் உலகு பற்றிய கருத்தை ஒரே மாதிரியாக முன்வைக்கிறார். இருவரும் கர்ணனிடம் அதை வெளிப்படுத்துகிறார்கள்.


வித்தியாசம் அவற்றில் இருந்து தீர்க்கதமஸ் விலகி நிற்க தார்த்தராஷ்டிரன் தன்னை சுற்றியுள்ள உலகை தொடுகை மற்றும் வாசனையால் நினைவில் கொண்டுள்ளார்



———————————————————-

வெண்முரசில், ஜெயத்ரதன் ஒரு சாதாரண எதிரி வீரராக அல்ல; அவரது மனப்போக்கும், செயல் வடிவங்களும் நுட்பமாக எழுதப்பட்டு, மிக ஆழமான உளவியல் அடுக்குகளுடன் வரைகப்படுகிறார். அபிமன்யுவின் இறப்பில் அவர் வகிக்கும் பங்கு பாரம்பரிய பாரதக் கதையைவிட வெண்முரசில் மிக ஆழமாக, சிக்கலான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது.




பிறித்தரிய முடியாத பார்வையற்றவர்களின் உலகில் தன் தொடுகையால் , வாசனையால் அவர் பிறித்து வைத்திருக்கும் உலகம் மிக விரிவானது.இசை அரங்கில் ஆயிரம் இளம் கௌரவர்களாக அமைதியுற்று அமர்ந்திருப்பதும். வெளியே வீதிகளில் பல்கிப் பெருகி நிறைவதுமாக உலகை பலவிதங்களில் கண்டு தீராதவராக இருப்பவர்.


அவர்களின் உலகின் விதிகளுக்கு உட்பட்டு வாழந்து முடிந்த தீர்க்கதமஸும்,தார்த்தராஷ்டிரன் இவற்களுடன் பார்வையுள்ள பிருஹத்காயராக விசித்திர உருவெடுத்தவராக மூன்று வெவ்வேறு பரிமாணத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.


தனக்கான உலகை வலிந்து உருவாக்கிக் கொண்டு வாழ்ந்து உழலும் மனிதராக தார்த்தராஷ்டிரன் தன்னை வரையறை செய்து கொண்டாலும். துரியன் பொருட்டு மனம் அலைக்கழிப்பில் இருக்கிறார்.


விழியற்றவரை கர்ணன் சந்திக்கும் இடத்தைகூற்றென கேள்எடுத்தாளலாம். தங்களின் எண்ணங்களால்கூற்றெனும் கேள்தான் உருவாக்கிய உலகமும் அதனால் அடையும் நிறைவும். அங்கிருந்து அதற்கு மறு தட்டான மரணம் என்பதால் அவர் உருவாக்கிய தொடுகை மற்றும் வாசனைகளால் ஆன உலகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கிறார். நிலையழிகிறார். அவரை தனது தந்தையாக காணும் ஜெயதரதன் மூன்றையும் இணைத்து புரிந்து கொள்ள உதவுகிறார்


பிரித்தறிய முடியாததாகி நிற்கு அதை எங்கும் நிறைத்து கொண்டுள்ள பார்வையற்றவர்கள் உலகில் அடைய ஏதுமில்லை என்பது ஒரு கூற்றென கேட்டு நிற்கிறது



தன் எட்டு மகன்களை தீச்சொல்லிட்டு அதை தனக்கே என செய்து கொண்டு துக்கத்தை ஒன்று ஆயிரமென பெருகி நிற்கும் மகன்களின் மரணத்தை மிக அருகில் நின்று அனுபவிக்கும் பொருட்டு தீர்க்கதமஸ் நுண் வடிவில் தார்த்தராஷ்டிரனுக்கு அருகில் நிற்கிறார். அவரை  தார்த்தராஷ்டிரனுக்கு தனது நுண் வடிவ ஞானத்தை அளிப்பவராக இருக்கிறார்

அந்த துக்கத்தை ஏற்று தார்த்தராஷ்டிரன்  அதை ஒன்று நூறு ஆயிரமென பெருக்குக் கொண்டு உழல்கிறார். இரண்டிற்கும் சாட்சியாக கர்ணன் நின்று கொண்டிருக்கிறான்

தார்த்தராஷ்டிரர் துரியன் மற்றும் ஜெயத்ரதன் பற்றிய எதிர் மறை கருத்துக்களை வைக்கிறார். இறுதியில் ஒற்றை சொல்லாகியஅஞ்சாதேஎன்பது நுண் சொல் போல நிற்கிறது


தார்த்ராஷ்ரன், தீர்க்கசியாமர்,பிருஹத்காயர் என விரிவடையும் நிழல் உருவம் மற்றும் இவர்களுடன் கர்ணன் தொடர்பு மிக விசித்திரமானது. தனது சுய நிலைகுலைவின் பொருட்டு எங்கும் பொருந்திப் போகாதவனாக எஞ்சுகிறான்


தீர்க்தமஸின் நிழல் உருவம் ஏன் கர்ணனுக்கு எதிர்மறை இருப்பாக இருந்து கொண்டிருக்கிறது


தீர்க்கதமஸின் வம்சத்தில் ஆசூர குடியைச் சேர்ந்த ப்ரஹதிராதன் அங்க நாட்டின் முதல் மன்னனாக அறியப்படுகிறான்


அவர் தொடங்கிய வம்சத்தில் பிறந்தவன் ஜராசந்தன்., மகத பேரரசின் அடித்தளத்தை அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவன் . ஜராசந்தனின் நண்பனாகும் கர்ணணனின் பயணம் இங்கிருந்து துவங்குகிறது


குரு குலத்திற்கு நேர் எதிரியாக கருதப்பட்டவர்.




இது ஒரு விதையாகப் போடப்படும் தருணம், அதாவது வாழ்க்கையின் மீதான கர்ணனின் புரிதல், அவனது இறுதி போராட்டம்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...