https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 1 மார்ச், 2025

புதுவை வெண்முரசு 79 வது கூடுகையில் எனது உரை குறிப்பின் எழுத்து வடிவம்


புதுவை வெண்முரசு கூடுகை 79

மனச் சிறை பெருந்தாழ்.

கர்ணன் பற்றியது


சிறை அனைத்து செய்பாடுகளையும் தடை செய்கிறது

மாபாரதம் , ஶ்ரீமத்பாகவதம். இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்றும். கண்ணனை பெருந்தெய்வமாக மாற்றும் முயற்சியாக பின்னர் எழுதியது என்கிறார்ஜெயமோகன்”.


நான் அதை அந்த கதையின் திரண்ட கருத்து ,விடப்பட்டவை அல்லது தீர்மானமாக சொல்ல வந்தவை என கொள்ளலாம் என நினைப்பதுண்டு. வெண்முரசு பற்றி இந்த கூடுகை அதில் இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.


வியாச பாரதம் மற்றும் பாகவதம் இரண்டும் எழுத துவங்கும் தருணத்தில் வியாசரும் நாரதரும் சந்தித்துக் கொள்கிறார்கள். ராமயணம் எழுத துவங்கும் சந்தர்ப்பத்தில் கூட வால்மீகியும் நாரதரும் சந்தித்துக் கொள்கிறார்கள்

இந்த முன்று முறையும் நாரதர் கேட்கும் கேள்விஏன் நிறைவில்லாமல் இருக்கிறீர்கள்என்று . நிறைவுறும் நோக்கத்தில் புதிதாக எழுதிப் பாருங்கள் என்பார்.


இதில் விசித்திரமாக ஒன்று நிகழ்ந்தது. அந்த நாள் அதிகாலை 5:30 மணிக்கு அலைபேசி அழைப்பு . அழைத்தவர்ஜெயமோகன்”. நேற்று இரவுடன் வெண்முரசு முடிவுற்றது. நிறைவுற்று அதை எழுதி முடிக்க முடியும் என ஏனோ தோன்றவில்லை. நண்பர் சொன்னார்கண்ணன் பிள்ளைத் தமிழ் எழுதி முடியுங்கள் நிறைவாக உணர்வீர்கள்என்றார். எழுதி முடித்தேன் நிறைவாக உணர்கிறேன் என்றார். “எனது கடிதத்தில் வெண்முரசு சார்பாக ஐவருக்கு நன்றி சொல்லி இருந்தேன் அதை அனைவருக்கும் நேரில் சொல்ல இருந்தேன். ஜாஜா,காளி,டைனமிக் நடராஜன்,விஜய்சூரியன்,சிங்கப்பூர் கணேஷ் மற்றும் நீங்கள் அதனால் இந்த அழைப்பு என்றார்.  


நிறைவுதல்என்கிற சொல்லை இங்கு மீள மீள சொல்லிக் கொள்கிறேன்.புதுவை வெண்முரசு கூடுகை துவக்கி இருக்காவிட்டால் இது எனக்கு நிகழ்ந்திருக்காது. அதற்கு வாய்பளித்த புதுவை வெண்முரசு கூடுகைக்கும்ஜெவிற்கும் நன்றி  


இந்திய மரபில் காமம் உயிர்கள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆதி விசையாக ஐம்புலன்களின் மொத்த விழைவுகளாக சுட்டுகிறது என புரிந்து கொள்ளப்பட்டால் .

அதன் ஆணையானநீங்கள் இனி பல்வாறு பல்கிப் பெருகுகஎன்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதை மட்டுறுத்துவது அற உணர்வு.அறம் யுகம் தோரும் மாறும் ஒன்றாகிறது என்பதால் அதை வேறு கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இங்கு காமத்தை  உடல் சார்ந்ததாக பார்க்காமல் பல்வேறு வகையில் அதை முன் வைக்கிறது வெண்முரசின் இந்தப் பகுதி.அதை சூதர் சொல்லாக துரியன் , கர்ணன் இவர்களுடன் பானுமதிக்கும் ஏன் இப்போது சொல்லப்பட வேண்டும் அதன் பின்னால் ஒரு பார்வையை தருவதாக இருக்கிறது.இங்கு வைக்கபடுவதன் பின்னணி என்ன என்று பார்க்க நினைக்கிறேன்


தீர்க்கதமஸும் அவரது சிறிய தந்தையும் அந்த உயிர் விசையின் வெவ்வேறு வடிவங்களாக முன்வைக்க படுகிறார்கள் என்பது அதன் அடிப்படைக் காரணங்கள் 

இங்கு காமத்தை உடல்களின் விழைவாக வைக்காமல் அதன் பின்னணி பற்றி கதவுகளை வெண்முரசு திறந்து வைக்கிறது


பிரஹஸ்பதி மற்றும் மமதை காமத்தை இருவரின் ஆழ்மனதில் வழி  சென்று கருவறையை தொடர்பு கொண்டாலும் அதன் உள்ளுறையும் வன்முறை பற்றி  பேசும் பகுதி . உலகி இலக்கியங்களில் இந்த நுட்பம் இவ்வாறு கையாளப்பட்டதா என தெரியவில்லை 


புராணம் பஞ்ச லட்சணம் மகாபாரதத்தின் பத்து லட்சணங்கள் (தச லட்சணங்கள்):


1.ஸர்கம்பிரபஞ்ச ஸ்ருஷ்டி

உலகின் தோற்றம் மற்றும் படைப்பு முறைகள்.


2.ப்ரதி ஸர்கம்  –

பிரபஞ்சம் அழிந்து மறுபடியும் தோன்றும் விதம்.


3.வம்சம்வம்ச வரலாறு

அரச வம்சங்களின் தோற்றம் மற்றும் வரலாறு.


4.மன்வந்தரம் – 

மனுக்களின் காலச்சுழற்சி

5.வம்சானுசரிதம்

முக்கிய அரசர்களின், நாயகர்களின் வரலாறு.


6.நாரோச்சாரம் – 

மனிதர்கள், அவர்களின் பண்புகள், சமுதாய அமைப்பு ஆகியவை பற்றிய விளக்கம்.


7.பாஷ்யம் 

தத்துவ விளக்கங்கள், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகியவற்றின் விளக்கம்.


8.ஸம்பவம்  – 

மகாபாரத கதையின் முக்கியமான நிகழ்வுகள், அவற்றின் விளக்கங்கள்.


9.உபசமம்

யுத்தம், விரோதங்கள் முடிவுக்கு வரும் விதம் மற்றும் சமாதானப் பயணம்.


10.ஹேதுதோஷநிர்ணயம் காரண விளக்கம்.

புராண லட்சனங்களை இன்றையகாவிய அணிகள்என எடுத்துக் கொண்டால்  வெண்முரசு எத்தனை லட்சணங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது என பட்டியலிடுவது மகாபாரதத்தை நவீன காலத்தில் வைத்து இன்னும் அணுக்கமாக நெருங்கி பார்க்க முடியும் என நினைக்கிறேன். இதை அடிப்படையாக கொண்டால் புராணத்தில் இருந்து வெண்முரசு அடைந்திருக்கும் காலத்திற்கான மாற்றம்  அதன் கூறுமுறையில் உள்ள நுட்பம் புரிந்து கொள்ள முடியும்.


மகரிஷி அங்கிரசின் புதல்வர்கள் இருவரும் பாண்டவ கௌரவ குலம் மட்டுமின்றி யாதவ குலத்தின் மூதாதைகள் என்பதை புரிந்து கொண்டால் இந்தப் பகுதியை

வேறு வகையில் விரித்தெடுக்கலாம்.“பிரம்மனின் மைந்தன் அங்கிரஸ். அவருக்கு உதத்யர் அதாவது சுக்கிராசாரியார் , மற்றும் பிரஹஸ்பதி என்று இரண்டு மைந்தர்கள்அக்கால அறம் இருவருக்கு ஒரு மனைவி என்பதை புரிந்து கொண்டால் இந்த கதை தரும் திடுக்கிடலை தவிற்கலாம்


பிரஹஸ்பதிதேவர்களின் குரு 

சுக்கிராசாரியார்அசுர குரு


அவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு இது மூல காரணமாக இருக்கலாம்.

 

இவர்களை குரு,யாதவ,அசுர,நிஷாத குலத்தின் மூததாதைகாள கொண்டு மகாபாரத சரித்திரத்தை எப்படி கொண்டு சென்று யுத்தத்தில் முடிக்கிறார்கள் அல்லது அழிகிறார்கள் என அவதானிகலாம் என நினைக்கிறேன்.


காலத்தை முன் அறிந்து கொள்ளும் நிமித்திக கூற்று அதை கணிக்க உதவும் கோள்கள் எளிய மானுடர்களுக்கு உள்ள அனைத்து குறைகளும் கொண்ட முக் குணங்களால் ஆன தெய்வங்களாக ஏன் முன் வைக்கப்படுகிறார்கள் என்பதும்

அதை கடந்து ஏன் தெய்வங்களாக நிலை கொள்கிறார்கள்


பிரஹஸ்பதி

சுக்கிரன்

சந்திரன்

புதன்.


போன்றவர்கள் இங்கு நேரடியாக வைக்கப்பட்டிருந்தாலும்

சூரியன் முதல் பிற கோள்கள் உலக போக்கை தீர்மானிப்பதான கோள்கள் முழுவதுமே தங்கள் பலம் மற்றும் பலஹீன மேடு  பள்ளங்களால் காலத்தை எளிதில் கணிக்க முடியாதபடி பிரபஞ்ச பக்கங்களில் அது எழுதி முன் செல்கின்றன


பிரஹஸ்பதியின் மகன் கச்சன். சுக்கிராசாரியாரிடம் மிருக சஞ்சீவினி மந்திரம் கற்க வந்து அவரது மகள் தேவயானி ஒருதலைக் காதல் கொள்கிறாள்





தேவயாணியின் தோழி சர்மிஷ்டை அசுர மன்னன் விருச்பர்வாவின் மகள். தேவயாணி மற்றும் சர்மிஷ்டை வெவ்வேறு குலங்களை சேர்ந்த இவர்கள் ஏப்படி , ஏன் பாண்டவ யாதவ குலத்தின் பெருந்தாயாகிறார்கள்.  

அதன் வழியாக உருவாகும் குல பூசல்களின் மறுபக்கம்

சர்மிஷ்டை குருமகள் தேவையானி.இருவரின் பகைக்கான பின்புலம். பின் தேவையானிக்கு தாசியாதல். அங்கிருந்து இருவரும் யயாதிக்கு மனைவியாதல். பின் அங்கிருந்து 

பாண்டவ கௌரவ குலம் உருவாதல். என நீண்ட சிக்கலான குலமுறை உருவாகி வருவதை அறிந்து கொள்ள முடிகிறது


தாரா பிரஹஸ்பதியின் மற்றொரு மனைவி 

தாராவை சந்திரன் காதலிக்கிறான். தாராவும் சந்திரனை ஏற்று அவனுடன் சென்றுவிடுகிறாள்.

பிரஹஸ்பதி கோபமடைந்து, தாராவைத் திருப்பி அனுப்புமாறு சந்திரனை கோருகிறார். சந்திரன் மறுக்கிறான்.

இது தேவர்களிடையே பெரும் சண்டையை ஏற்படுத்தியது. இறுதியில் பிரம்மா தலையிட்டு, தாராவை பிரஹஸ்பதியிடம் திருப்பி அனுப்பச் சொல்கிறார்.

புதன் தாரா மற்றும் சந்திரனின் மகனாகப் பிறக்கிறான். அவனின் அறிவுத்திறனாலும், புலமைதிறனாலும் புகழ் பெற்றவன்.

புதன், தாரா மற்றும் சந்திரனின் மகனாகப் பிறந்ததால், அவனின் அடையாளம் குறித்து குழப்பம் ஏற்பட்டது.பிரம்மா தலையிட்டு, புதன் சந்திரனின் மகனாக அங்கீகரிக்கரிக்கிறார் .சந்திர வம்சத்தின் பின்னணி இது 


மேலும் இதிலுள்ள முரண்கள் 

பிரஹஸ்பதி அதர்வன வேத அதிகாரியாக அரியப்படுகிறார். மேலும் அவர் லோகாயத மத ஸ்தாபகர். நாத்திகவாதி. அவரின் நாத்திகவாதத்தின் முக்கிய அம்சங்கள்:

1.உலகம் புலன்களால் உணரக்கூடிய பொருட்களால் மட்டுமே அமைந்துள்ளது. ஆன்மா அல்லது பரலோகம் போன்ற அபாரமான கருத்துகளை மறுக்கிறது.

2.வேதங்கள் மற்றும் அதில் கூறப்பட்ட இறைமறைகள் மற்றும் யாக யஜ்ஞங்களை நிராகரிக்கிறது.

3.அநுபவம் மட்டுமே சத்தியம்அறிவு, தர்க்கம் மற்றும் அனுபவம் மூலம் உண்மையை அறிய முடியும்; மத நம்பிக்கைகளுக்கு இடமில்லை.

4.உலகில் மகிழ்ச்சியை அடைவதற்கான வழிகளை மட்டுமே முக்கியமாகக் கருதியது.

தீர்க்கதமஸின் வம்சத்தில் ஆசூர குடியைச் சேர்ந்த ப்ரஹதிராதன் அங்க நாட்டின் முதல் மன்னனாக அறியப்படுகிறான்


அவர் தொடங்கிய வம்சத்தில் பிறந்தவன் ஜராசந்தன்., மகத பேரரசின் அடித்தளத்தை அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவன்


குரு குலத்திற்கு நேர் எதிரியாக கருதப்பட்டவர்.


ஜராசந்தனின் அசுர வேதத்தை என பிறிதொரு அறத்தை பூமியில் நிலைநிறுத்த முயன்றவன்.அவனை பாரதப் போர் துவங்கும் முன்பாக கண்ணன் கொன்றான். கண்ணன் மற்றும் ஜராசந்தனும் நேரடி இரத்த சொந்தங்கள் அல்ல, ஆனால் கண்ணின் மாமன் கம்சன் ஜராசந்தனின் மருமகன் அந்த வகையில் ஜராசந்தன் கண்ணனின் உறவினன்.

கண்ணனுக்கு நேர் பகைவன் 17 முறை மதுரையை வீழ்த்த போர்த் தொடுத்தவன்.  


ஏகலைவன் ஜராசந்தனின் படையில் இருந்தவன். அர்ஜுணன் மற்றும் கர்ணனுக்கு இணையான வீரனாக வைக்கப்பட்டவன். இந்த பின்னணியில் ஜராசந்தன் கௌரவர் பக்கத்தில் இணையும் வாய்ப்பால் பாரதப் போரின் போக்கு பாண்டவர்களுக்கு எதிராக முடியும் என கண்ணனால் கணிக்கப்பட்டதால் பாரதப் போருக்கு முந்தைய பீமனுடனான தனிப் போரின் தந்திரமாக அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டு அதன் ராஜ்ஜியம் சமன் செய்யப்படுகிறது.


கர்ணன் ஜராசந்தனின் உறவு கமசனுக்கு மகள் கொடுத்தவன் எனழகிற அடிப்படையில் ஜராசந்தன் கண்ணனுக்கு மாமன் முறை என சிக்கலை உருவாக்கக் கூடியது


துரியன் ஜரசந்தன் சந்திப்பு நிகழ கர்ணன் அதற்கானவனாக இருந்தான். அந்த சந்திப்பிற்கு முன்பு அவன் அழிக்கப்பட வேண்டிய அனைத்தும் எழுந்து விட்டன


  1. புதிய ஆசுர அறத்தை நிலைநிறுத்த இளவரசர்களை யாகத்தில் பலியிட நினைத்தது.


  1. கண்ணனின் முதன்மை எதிரியாக தன்னை உருவாக்கிக் கொண்டது.


  1. போரில் கௌரவ பட்சம் எடுக்க இருக்கும் சிக்கல்



இந்த தொடர்புகளை குறிப்புணர்த்த   குறித்தே சூதர்களால் துரியன் கர்ணன் இருவரிடமும் இந்த கதை பாடப்படுகிறது.  


துரியன் தீர்க்கதமஸை தனது தந்தையுடன் ஒப்பீடு செய்கிறான். அதன் உள்ளார்ந்த கருத்துக்களை கர்ணனும் பானுமதியும் வேறு விதமாக உள்வாங்கிக் கொள்கிறார்கள்




கலிங்கத்துடன் மனவுறவு முயற்சி தோல்வியில் முடிந்த பிறகும். மூத்தவளை துரியனும் இளையவளை கர்ணனும் சிறை கொணர்ந்து மனம் செய்து கொள்கிறார்கள்


தவம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு உடலின் சக்கரம் வழியாக தன் வாயில் கவ்வியிருக்கும் வாலை விடுவித்து தண்டுவட நாடி வழியாக ஒவ்வொரு சக்கரத்தில் பயணம் செய்து. இதய கமலத்தில் அனாஹதம் எட்டு இதழ் தாமரைகளினால் ஆனது ஒவ்வொரு இதழும் ஒரு குண பூர்த்தியை அளிப்பவை. முக்குணங்களால் ஆன மனிதன் அதன் ஒரு குணம் ஓங்கப் பெரும்போது அதன் இதழ்களை நுழைந்து பூர்த்தி அல்லது பிறிதோரு நிலையை அடைகிறான். பிரஹஸ்பதி அதில் தனது புத்திரனை கண்டு காமத்தை அடைகிறார் என புரிந்து கொண்டால் இதற்கு வேறொரு வடிவம் கிடைக்கலாம். காமம் என்பதை யுக அறம் என வகுத்துக் கொண்டால் இந்தப் பகுதியை வாசிக்க இயலும் 


1.ஆசையாகவும் (Lust) – நரகாசூரன், ராவணன் போன்றவர்களின் கதைகள்


2.அன்பாகவும் (Love) – சீதை-ராமன், அர்ஜுனன்-சுபத்திரை போன்ற கதைகள்

3.மோட்சத்திற்கான பாதையாகவும் (Spiritual Love) – ராதா-கிருஷ்ணர் உறவு


4.வெறுப்பும் கூட ஒரு மோட்ச சாதனமாக பார்க்கப்படுகிறது.


இந்திய புராண இலக்கியங்களில் காமம் பற்றி பலவாறு விவரிக்கப்பட்டுள்ளன. அவை குறித்த அந்த காலத்தைய அறம் பற்றிய புரியாமையால் அவை நமக்கு அதிர்வளிப்பதாக இருக்கிறது. பிரஹஸ்பதி. இன்னொரு உயிர் உலகிற்கு வரும் நேரத்தை தன் காமமாக உணர்கிறார். பிற நியாயங்களை மறுப்பதன் வழியாக அந்த பிறப்பு நிகழாது புதியதாக ஒன்று உருவாகிறது. தீர்க்கதமஸ் நான்கு வேத நிபுணராக அறியப்படுகிறார் மூதாதை ஆங்கிரஸிடம் மூன்று வேதங்களையும் தன்னை சபித்தவரான சிறிய தந்தை பிரஹஸ்பதியிடம் அதர்வன வேதத்தை கற்கிறார்.தனது செயல்கள் மூலம் அவரை நகல் செய்கிறார் அதனால் பிரஹஸ்பதியின் நாத்திக     வாதத்தை முழுமையாக ஏற்றவராக அதை பின் பற்றுபவராக வாழ்ந்து நிறைகிறார்


இறுது காலம் வரை அவரது நிலைபாடுகள் இவைகளாகவே நீடிக்கின்றன. முப் பெரும் தெய்வங்கள் தர விழையும் முக்தியை மறுக்கிறார் போகங்களை முன்வைக்கும் இந்திரனின் சொர்க்க வாழ்கையை ஏற்கிறார்.ரிக் வேதத்தில் பல முக்கிய ஸூக்கதங்களை இயற்றியவராக சொல்லப்படுகிறார். அங்கதேச தொடர்பு வேறு பகுதிகளில் வருகிறது என நினைக்கிறேன்


விழியாற்றவராக முற்றிருளில் உழல்பவராக்கு உலகிய நடைமுறை ஒரு பொருட்டல்ல. ஒரு பார்த்திவ பரமாணு உள்ளும் புறமும் உணரும் ஒன்றை மட்டும் வெளியிலும் உணர்கிறார். பசி வளர்தல் காமம் தான் இருக்கும் கருவறையில் பிறர் நுழைவதை தடுக்கிறது. பின் தனது இறுதி காலத்திற்கு பிறகும் அது காமம் மட்டுமே கொண்ட மனிதராகிறார்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசின் 80வது கூடுகையில் எனது உரை குறிப்புகள் எழுத்து வடிவில்

  வெண்முரசு கூடுகை . 80  எனது உரை 25 முதல் 40 வரை கூற்றெனும் கேள்   பேசு பகுதி   முதல் நிலை 24 முதல் 34 வரை . நண்பர் முத்துக்குமரன் ...