ருக்மிணி சந்தேசம் என சொல்லப்படுகிற ருக்மிணி கண்ணனுக்கு எழுதிய பிரசித்தப் பெற்ற ஏழு ஸ்லோகங்களுடன் கூடுகை துவங்கியது . நண்பர் செ.அமுர்தவில்லி உரையாடினார்
இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
சனி, 26 ஆகஸ்ட், 2023
வியாழன், 24 ஆகஸ்ட், 2023
புதன், 16 ஆகஸ்ட், 2023
பகடையின் தற்செயல்கள்
பகடையின் தற்செயல்கள்
வீட்டில் திடீரென செல் ஏறி பதட்டத்தை உருவக்கி அனைத்தையும் தலைகீழாக்கியது. சட்டென பல பொருட்கள் தேவையற்றதாகி வெளியேற்றப்பட்டது. அவை ஏன் இத்தனை வருடங்களாக சேமித்து வைக்கப்பட்டது. இந்த கேளவிக்கு என்னிடம் பதிலில்லை. கடந்த பத்து வருடங்களாக ஒரு முறை கூட எடுத்தப் பார்க்கப்படாலாகி இப்போது வெளியில் எறியப்பட்டது. ஏன் என ஆழமாக கேள்வி எழுப்பிக் கொண்டபிறகு அவை அத்தனை வருடங்களாக கவனிக்கப்படாமையே அவை தேவையற்றவைகள் என்பதற்கான நிரூபனம் என்றது தர்க்க் புத்தி. சிலபொருட்கள் வெளியாகி என்ன செய்வதென அறியாமல் திகைக்க வைத்தன. அவற்றை என்ன செய்யலாம் என பணியாளர் கேட்ட போது. அதை எடுத்து பத்திரப்படுத்துங்கள் என சொல்லிவிட்டேன். அவை அடுத்த பத்தாண்டுகளுக்கு பின்னர் தேவையற்றவைகளாக உருமாறும் வரை அவை அங்கே இருக்கக் கூடும்.
இவை சாத்தியகூறுகளாக தற்செயல்களாக நாளை வெளிப்படலாம். அப்படித்தான் வீடு மறுநிர்மாணம் செய்யப்பட்டு வந்த போது பூஜை அறையில் ஒரு திருமஞ்சன மேஜை வேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாகி அழகான கல்பதியப்பட்ட அன்னக்கால் வளைவு கொண்டு மிக நேர்த்தியாக செய்யப்பட்டது அந்த மேஜை . திருமஞ்சனத் தண்ணீர் வழிந்து ஓட நான் யாளி முகம் கொண்டதாக இருக்க வேண்டும் என சொல்லி பலமாதம் கழித்து தச்சர் இரண்டு யானை தலையை செய்து எடுத்து வந்தார். எனக்கு இரண்டு திகைப்பு .ஏன் யாளிக்கு பதிலாக யானை . ஏன் இரண்டு. இரண்டிற்கும் அவரிடம் பதிலில்லை. எனக்கு அவரை விட மனமில்லை சரி ஒன்றை திருமஞ்சன மேஜையில் பதிக்கச் சொன்னேன். பிறிதொன்றை எடுத்து என்ன செயவது என அறியாமையால் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டேன். அது தான் இப்போது திடீரேன வெளிப்பட்டது.
பூஜை அறை செல்லரித்த பகுதிகளில் வேலை செய்ய தச்சர் வந்தபோது தனது வேலையை முடிக்கும் தருணம் எடுத்து வைத்த யானைத் தலை நினைவு வர அதை வீணாக்கும் எண்ணமின்றி எங்காவது மாட்ட நினைத்த போது ஊஞ்சல் எதிர்புறம் உள்ள மர குறுக்கு வாரை அதற்கு உகந்த இடமாக இருந்தது. அங்கு மாட்டப்பட்போது அதற்கு வண்ணம் பூசலாம் என நினைத்திருந்தேன். அத்துடன் அது மறந்து போனது. சட்டென ஒரு நாள் அதற்கு தங்க நிறம் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றி அந்த எண்ணம் வருப்பட்டபோது அடுத்த வந்த வேலைகள் அதை மறக்கச் செய்தது.
என் மைத்துனன் மகள் மருத்துவ உயர்படிப்பு முடிந்து புதுவை வந்திருந்தாள். பரிட்சை முடிவு வெளியாகி முதல் வகுப்பில் தேர்வான போது அவளது தாய் தான் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் இழுக்க நேர்ந்திருப்பதை சொல்ல மனைவி பரபரப்பானாள். எனக்கு மணக்குள விநாயகர் கோவில் என்றாலே ஒரு சிறு நிராகரிப்புண்டு. அவருடைய தங்கத்தேரை இழுப்பது என்ன நேர்த்திக் கடன் என புரியவில்லை. விநாயகரை பார்க்கும் போது குறும்புள்ள குழந்தையை பார்பது போல இருக்கும். அதற்கு இதுவொரு விளையாட்டு போல என நினைத்துக் கொண்டேன்.மனைவி ஓட்டுனர் குணாவை கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய துவங்கினார். புதுவையில் மிகப் பிரசித்தி பெற்ற கோவில் அதன் உற்சவங்கள் செலவேறியவை மற்றும் தேதி கிடைப்பதில் சிக்கலெழும் என சொன்னேன்.
சில நாட்களில் யாரோ ஒருவர் பதிந்து வைத்திருந்தது ரத்தாக அந்த தேதி எங்களுக்கு கொடுக்கப்பட்டது. மனைவி அதை இன்னும் விரிவாக்கி அபிஷேகம், அன்னதானம், தங்கத்தேர் என வடிவமைத்தாள். இதில் எதிலும் நான் பங்கெடுக்கவில்லை ஆகஸ்ட் 15 என நாள் குறித்துக் கொடுக்கப்பட்டு வியப்பூட்டியது. ஆகஸ்ட் 15 கோவிலில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். அன்று காந்தி சிலை அருகே நிகழும் கொடியேற்றம் பின்னர் அரவிந்தரின் பிறந்த நாள் என கூடும் கூட்டமெல்லாம் கோவிலுக்குத்தான் வரும்.
கடலூரில் இருந்து வரும் என் மைத்துனர் குடும்பம் முதல் நாள் இரவே வந்துவிடுவதாக திட்டம். என்னக் காரணத்தினாலோ வரமுடியாலாகி மறுநாள் காலை கோவிலுக்கு நேரே வந்துவிடுவதாக கூறினார்கள். ஓட்டுனர் குணா அந்த யானை சிலைக்கு தங்கநிற வண்ணம் போட்டு மாட்டுவதாக சொன்னபோது அதன் வலப்புற தந்தங்கள் சற்று பின்னமாகி இருந்ததால் என்ன செய்வதென்றார். நான் அதை சரி செய்து தருவதாக அதன் பின்னர் வண்ணமடித்து மாட்டலாம் என்றேன்.
“விநாயகருக்கு ஒரு பக்கம் தந்தம் பின்னம்தானே அதை ஏன் சரி செய்ய வேண்டும்” என்றார். நான் குழம்பபி “இல்லை அது யானைதானே” என்றேன். அதை கேட்டு என் மனைவி நக்கலாக சிரிக்க. நான் சரி அதை அப்படியே வண்ணம் அடித்து மாட்டிவிடுங்கள் என கூறிவிட்டேன்.
புதிய பதிவுகள்
-
புதுவை வெண்முரசு கூடுகை தனது 75 வது கூட்டம் 12.09.2024 வியாழன் அன்று காலை 10:20 க்கு துவங்கியது . இது எழுத்தாளர் ஜெயமோகன் புத...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ : மணிவிழா - 56 24.01.2023 என் மீதான அவநம்பிக்கையால் “ வேளுக்குடி ” சொல்ல நினைத்ததை மீள மீள எனக்குள் எழுப்பிக் க...
-
ஶ்ரீ : பதிவு : 269 / 356 / தேதி :- 16 டிசம்பர் 2017 * மறுமுனையைத் தேடி * “ ஆளுமையின் நிழல் ” - 15 கருதுகோளின...
-
ஶ்ரீ : பதிவு : 137 / 210 தேதி :- 24 ஜூலை 2017 * கற்பிதத்தின் பிழை * இயக்க பின்புலம் - 63 அரசியல் ...
-
வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...
-
ஸ்ரீ: பதிவு : 244 / 330 தேதி :- 20 நவம்பர் 2017 * பல திறப்புக்களின் வாய்ப்பு * “முரண்களின் முனைகள் ” - 13 ” கரு...