https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 15 ஜூலை, 2023

பூஜை ரூமும் செல்லும். கவலையால் ஆவதென்?

 


இன்று காலை பூஜையில் அப்பா அம்மா படத்தில் மேல் ஓரமாக சில நகர்வுகளை பார்த்து அதிர்ந்தேன். அது என்னவென தெரியும். ஒவ்வொரு நாளும் ஹாலை கடக்கும் போதெல்லாம் ராமர் படத்திற்கு பின்புலமாக நான் போட்ட மர பேனல் வேலை பல சமயம் தொந்தரவு செய்வதுண்டு. செல்லேறுவது பற்றி எப்போதும் ஒரு துணுக்குறல் இருக்கும் இந்த முறை ஹாலுக்கும் பூஜை அறைக்குமான சுவற்றில் செல்லின் நடமாட்டம் பார்த் போது உடன் அதை கட்டுப்படுத்தும் நிறுவனத்தை அழைத்தேன். அவர்களும் உடனே வந்து வேலையை துவக்கிவிட்டார்கள். அவர கள் நிர்வகத்தில் இருந்து நான் தொடர்பு கொண்டவர் வந்து சேதம் குறித்த பரிசீலனையின் போது நாளை வேலை துவக்கலாம் என்றனர். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது .இல்லை காலையில் வந்து ஆரம்பித்துவிட்டார்களே என்றேன் அவர் குழம்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு வந்தவர் அவரது நிறுவனத்தை நேர்ந்தவர் என உறுதிப்படுத்தும் வரை சற்று குழம்பித்தான் போனேன். மனைவி பூஜை அறையில் செல்லேறியது ஏதோ அபசகுணம் என கவலைப்பட்டாள்நான் அதில் இருந்தெல்லாம் மெல்ல வெளியேறி இருந்தேன்பார் எவ்வளவு விரைவில் யாரென்றே தெரியாமல் வந்து அதை சரி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு ஒன்று என்றால் அது பதறட்டுமே நீ சும்மா இரு என்றேன். வீடும் ஒரு வகை இருப்புத்தானே கவலைப்பட அதற்கு நேரமிருக்கும் போது நமது கவலையால் ஆவதென்?











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்